பிரியங்காவை வெளியேற்றிய பிக் பாஸ் - அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!

 
priyanka

லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கில் இருந்து பிரியங்காவை பிக் பாஸ் வெளியேற்றுவது போல இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5ல் தற்போது 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். நேற்று 6-வது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதுவரை போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத இரண்டு நபர்களை மட்டுமே நாமினேட் செய்து வந்தனர். ஆனால் இந்த முறை ஒவ்வொரு போட்டியாளரும் மூன்று பேரை நாமினேட் 
செய்ய வேண்டுமென பிக் பாஸ் அறிவுறுத்தினார். கடந்த வாரமும் வித்தியாசமாக தான் நாமினேஷன் நடைபெற்றது.

bb

போட்டியாளர்கள் அனைவரும் கன்பஷன் ரூமுக்குள் சென்று நாமினேஷன் செய்யத் தொடங்கினர். இறுதியில் ராஜு, அக்ஷரா, இமான், சிபி, அபினய், பவானி ரெட்டி மற்றும் மதுமிதா ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றனர். இந்த வார கேப்டனாக அபினய் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தனது நாணயத்தை பயன்படுத்தி இசைவாணி அவரிடம் இருந்து கேப்டன் பதவியை கைப்பற்றிக் கொண்டார். இதனிடையில், பவானி ரெட்டி வைத்திருக்கும் நாணயத்துக்கான சிறப்பு ஆற்றலும் வழங்கப்பட்டு லிவ்விங் ஏரியாவை அவர் ஆளுமை செய்யலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது. அதன் படி, பவானி ரெட்டி தனது பேச்சைக் கேட்காத நபர்களுக்கு தண்டனை கொடுத்து வருகிறார்.


இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், 'பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக உங்கள் வெற்றிக்காக மற்றவர்கள் போட்டி போட போகிறார்கள். நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை என்பது டாஸ்க் பெயர். நம் பெயர் இருக்கும் பொம்மையை எடுக்கக்கூடாது. மற்ற நபர்களின் பெயர் கொண்ட பொம்மையை எடுத்துக் கொண்டு கூடாரத்திற்குள் ஓடி வரவேண்டும். கடைசியில் ஓடி வரும் நபரின் கையில் இருக்கும் பொம்மையில் இருக்கும் நபர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று இமான் அண்ணாச்சி அறிவிக்கிறார். கடைசியில் பிரியங்கா போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவது போல புரோமோ முடிகிறது.