”இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்” - எஸ்.பி.பி. பிறந்த தினம் இன்று!

 
SPB

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் 77வ்வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என இந்தியாவின் பல மொழிகளில் பாடல்களை பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனந்தபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வந்த நிலையில், டைபாய்டு காச்சல் காரணமாக அவர் படிப்பை கைவிட நேர்ந்தது. பாடகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.  திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.  பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வந்தார்.40 ஆயிரம் பாடல்கள், ஆறு தேசிய விருதுகள், ஒரே நாளில் 21 பாடல்கள் என எவரும் செய்திட முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டினார் எஸ்.பி. ஏ.ஆர் ரகுமான் முதல் அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

SPB

பத்மஸ்ரீ, பத்மபூஷன் என இந்திய அரசின் மிக உயரிய விருதுகளையும் பெற்றார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களின் மனதை ஆக்கிரமித்திருந்த எஸ்.பி.பி இம்மண்ணை விட்டு மறைந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆக போகிறது.  கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்த 2020ல் ஆகஸ்டு 05ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி. உடல்நிலை தேறி வந்த நிலையில் செப்டம்பர் மாதம் 25ம் தேதி மறைந்தார். இந்த நிலையில், எஸ்.பி.பி.யின் 77வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.