செப்.9ல் ‘வேட்டையன்’ படத்தின் முதல் சிங்கிள் ‘மனசிலாயோ’ ரிலீஸ்..

 
MANASILAAYO - Vettaiyan MANASILAAYO - Vettaiyan

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் சிங்கிள் ‘மனசிலாயோ’ வரும் 9ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு  நிறுவனம் அறிவித்துள்ளது. 

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  'வேட்டையன்'. இந்தப்படத்தில்  அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன் , ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளன.  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள 'வேட்டையன்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

MANASILAAYO  - Vettaiyan

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரும் நட்சத்திர பட்டாளங்கள்  நடித்துள்ளதால் வேட்டையன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் டப்பிங் பணிகள் குறித்த புகைப்படங்களை  நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்தவகையில் நடிகர் ரஜினி டப்பிங் பேசும் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு தீனி போட்டது.  இந்நிலையில் ‘வேட்டையன்’ படத்தின் முதல் சிங்கிள் ‘மனசிலாயோ’ வரும் 9ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு  நிறுவனம் அறிவித்துள்ளது. 
 


 


 

null