‘சட்டப்பேரவையில் கடுப்பான ஸ்டாலின்’… திமுக எம்.எல்.ஏக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

 

‘சட்டப்பேரவையில் கடுப்பான ஸ்டாலின்’… திமுக எம்.எல்.ஏக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

மானியக் கோரிக்கையின் போது தன்னை புகழ்ந்து பேசினால் நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் திட்டமிடப்பட்டதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே முடிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன் படி, செப்டம்பர் 13-ஆம் தேதிக்குள்ளாகவே அனைத்து துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. எனவே, சட்ட முன்வடிவு மற்றும் கேள்வி நேரத்தின்போது தலைவர்களை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டிப்பான வேண்டுகோள் விடுத்திருந்தார்.

‘சட்டப்பேரவையில் கடுப்பான ஸ்டாலின்’… திமுக எம்.எல்.ஏக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிக்கிறேன் என அவர் தெரிவித்திருந்தார். முதல்வர் உத்தரவின் படி, தங்களது உரையை ஆரம்பிக்கும் முன்பு பெரியார், கலைஞர், ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவதை அமைச்சர்கள் நிறுத்திக் கொண்டனர். இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் முதல்வரின் உத்தரவை மீறிவிட்டார்.

முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை மீறி அவர், பேரவையில் முதல்வரை புகழ்ந்து பேசினார். இதனால் கடுப்பான முதல்வர் ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் தன்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடித்ததற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், எதையும் லிமிட் ஆக வைத்துக் கொள்ளுங்கள். நேற்றே இது தொடர்பாக கட்டளையிட்டேன். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.