• June
    27
    Thursday

Main Area

Main



குன்னூரில் கோடை கொண்டாட்டம்: சிம்ஸ் பூங்காவில் இன்று முதல் ஆரம்பமான பழக் கண்காட்சி!

குன்னூர் சிம்ஸ் பூங்கா
குன்னூர் சிம்ஸ் பூங்கா
Loading...

நீலகிரி: 61வது பழக்கண்காட்சி நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகைக்காய் அதிகரிக்கவும், அவர்களை உற்சககபடுத்தவும் பலகண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பழக்கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. 

nilagiri

அதில் சிறப்பம்சமாகப் பூங்காவின் நுழைவு வாயிலில் 12அடி உயரத்தில் பலாப்பழம் உட்பட பல்வேறு பழங்களாலான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு, சாத்துக்குடி,  பைனாப்பில்,  பிளம்ஸ். டார்ஜன் போன்ற பழங்களால்  மயில், பட்டாம்பூச்சி போன்ற வடிவங்கள் அழகான முறையில் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

nilagiri

இதைத் தொடர்ந்து தோட்டக்கலைத் துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, முள்சீதா பழம், துரியன் பழம் உள்ளிட்ட சில பழங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சிக்கு ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.