• June
    27
    Thursday

Main Area

Main



'கிரிக்கெட் எனக்கு போராட  கற்றுக் கொடுத்தது' - யுவராஜ் சிங் உருக்கம்

 யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்
Loading...

நட்சத்திர வீரராக இந்திய கிரிக்கெட் அணியில் திகழ்ந்த யுவராஜ் சிங், இன்று  சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 'இந்த 22 யார்டுகளில் எனது 25 ஆண்டுகளை கழித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் உள்ளே வெளியே ஆட்டத்தில் இருந்தேன். இந்த விளையாட்டை கடந்து செல்ல முடிவெடுத்துள்ளேன்.

yuvraj

இந்த விளையாட்டு எனக்கு எப்படி போராட வேண்டும், எப்படி வீழ்ச்சியில் இருந்து எழ வேண்டும், எப்படி தோல்விகளில் இருந்து கடந்து செல்ல வேண்டும் என எல்லாம் கற்றுக்கொடுத்திருக்கிறது' உருக்கமாகப் பேசியுள்ளார் யுவராஜ் சிங்.
இந்திய அணிக்காக இதுவரையில், யுவராஜ் சிங்  40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் சர்வதேச போட்டிகளில் 17 சதங்களை எடுத்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 62 இன்னிங்ஸ்களில் 1900 ரன்கள் எடுத்திருக்கும் யுவராஜ் சிங், ஒருநாள் போட்டிகளில் 278 இன்னிங்ஸ்களில் 8701 ரன்கள் எடுத்துள்ளார்.
2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது தொடர் நாயகன் விருது பெற்றவர் யுவராஜ் சிங்.
2007 டி20 உலகக்கோப்பையில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசி கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த இரண்டு உலகக்கோப்பையையும் இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் யுவராஜ்சிங்.

yuvraj

மிடில் ஆர்டரில் களமிறங்கும் யுவராஜ் சிங் பகுதி நேர பந்துவீச்சாளராகவும் செயல்பட்டிருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் அவர் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் என பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். அணித்தலைவராகவும் செயல்பட்டுள்ளார். 1981 டிசம்பர் 12-ம் தேதி பிறந்த யுவராஜ் சிங் தனது  37வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.