• July
    16
    Tuesday

Main Area

ஆன்லைன் மேட்ரிமோனியல் சந்தா வசூல் கொள்ளை. பர்ஸ் பத்திரம்!

கருப்பானவர்களை கலராக்கும் சிவப்பழகு க்ரீம், லாட்ஜ்களுக்கு மாதம் ஒருமுறை விஜயம் செய்யும் சித்த வைத்தியர் போல சர்ச்சைகளுக்குப் பெயர்போனது ஆன்லைன் திருமண தகவல் மையங்கள். தொழில்முறை திருமண தரகர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று, பெண்ணையோ பையனையோ நேரடியாகப் பார்த்து, சாதக பாதங்களை கண்கூடாகக் கண்டு, வீட்டில் இருக்கும் வசதி வாய்ப்புகள் அறிந்து அதன்பிறகு தகுதியான வரன்களைத் தேடித் தருவார்கள். இருவீட்டாரின் எதிர்பார்ப்பும் வசதியும் என்னவென்று தரகர்களுக்கு துல்லியமாக தெரியும் என்பதால், அதிகபட்சம் ஆறு மாதங்களில் வரன்கள் கைகூடுவது வெகு சாதாரணம்.

Online matrimonial frauds

ஆனால், ஆன்லைன் மேட்ரிமோனியல் நிறுவனங்களின் தொழில் அடிப்படையே வேறு. நீங்கள் கருப்பா சிவப்பா, நெட்டையா குட்டையா என எதுவுமே தெரியாது.அழகுப்பதுமைகாளாக ஜொலிக்கும் பெண்களின் போட்டோக்களை ஆசையாக க்ளிக் செய்துப் பார்த்தால் அவர்கள் மாடல்களாக இருப்பர். அப்லோட் செய்யப்பட்டிருக்கும் போட்டோ மற்றும் பிற தகவல்களின் உண்மைத்தன்மை குறித்தும் அவர்களால் உறுதி தரவே முடியாது. அவர்களுக்குத் தேவை எல்லாம் நம்முடைய சந்தாப் பணம்தான். குறிப்பிட்ட சந்தாவிற்கு இத்தனை மாதம் அனுமதி, அதற்குள் பிடித்த வரன்களின் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, பார்த்து, பேசி, பழகி, முடிவு எடுத்துவிடவேண்டும். இல்லை என்றால், அடுத்த சந்தாவிற்கான நாள் நெருங்கிவிடும். இவர்களாவது பரவாயில்லை. ஒருசில திருமண வரன்தேடும் இணையதளங்களில், வரன்களின் தொலைபேசி எண்ணோ, முகவரியோகூட தராமல் போட்டோவை மட்டும் காட்டி பணம்பறிக்கும் சம்பவங்களும் நிகழத்தான் செய்கின்றன. அரசுதான் இவர்களுக்கு கடிவாளம் போடவேண்டும்!

gunaseelan Mon, 07/15/2019 - 18:18
online matrimonial fraud caution Repeated subscription notice Marriages made in heaven Matrimonial sites க்ரைம் குற்றம் உள்ளூர்

English Title

Be aware of online matrimonial subscription scandals

News Order

0

Ticker

1 
பாலியல் தொல்லை

இரண்டு ஆண்டுகளாக 59 சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்: மிட்டாய் வாங்க சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!

கேரளாவின் பாலக்காடு அருகே பட்டாம்பி திருத்தலா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 57 வயதாகும் இவர் அங்குள்ள அரசு பள்ளியின் அருகே பெட்டிக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார்.


தற்கொலை

15 வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை: 'எஸ்ஆர்எம் கல்லூரி'யில் தொடரும் மர்மங்கள்!

எஸ்.ஆர்.எம் கல்லூரியின்  மாடியிலிருந்து குதித்து  மாணவர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த்

ஓரின சேர்க்கைக்கு மறுத்த இளைஞர்: கூட்டு சேர்ந்து கொலை செய்த வாட்ஸ் ஆப் நண்பர்கள்; அதிர வைக்கும் சம்பவம்!

தன்பால் உறவுக்கு மறுத்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்கிற்குள் கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

கஞ்சா போதையில் வந்த ரவுடிக் கும்பல் ஒன்று பெட்ரோல் பங்கிற்கு ஆயுதங்களுடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரோடு போட்ட ரசீது இங்க இருக்கு, நீங்க போட்ட ரோடு எங்க இருக்கு?

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புதிய சாலை அமைப்பதற்காக ஆர்டர் போடப்பட்டு, வேலை வாங்கப்பட்டு, டெண்டர் தொகை வழங்கப்பட்டு, ரசீது வாங்கப்பட்டு, பலர் பாடுபட்டு அமைக்கப்பட்ட ரோடு மட்டும் காணோம். சாலை அமைக்கப்பட்டிருக்கிறது என எங்கே அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்களோ அங்கே பலகை மட்டுமே பல்லிளித்துக்கொண்டு இருக்கிறது. சாலையைக் காணோம்.

Board there, road where?

சாலை அமைத்ததற்கான தொகையாக அறிவிப்பில் இருப்பது 19 லட்சத்து 50ஆயிரம். எந்தெந்த அதிகாரிகளுக்கும் எந்தெந்த வட்டத்திற்கும் எவ்வளவு ஷேரோ? காமராஜபுரம் பகுதியில் சாலை என்றில்லை, எந்த அடிப்படை வசதியையும்கூட அதிகாரிகள் செய்து தருவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.
 

gunaseelan Mon, 07/15/2019 - 12:09
Well missing comedy 20 Lakh worth Road missing Ramnad, Kadaladi Road missing க்ரைம் தமிழகம்

English Title

Officials jeopardize 19,50,000 worth Road construction

News Order

0

Ticker

1 
 சாக்ஷி மிஸ்ரா - அஜிதேஷ் குமார்

காதல் திருமணம் செய்துகொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!

பாஜக எம்.எல்.ஏ மகளின் கணவர் நீதிமன்ற வாசலில் இன்று கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அப்துல் ரஹ்மான் - அப்ரா பாத்திமா

மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: கதறும் தந்தை!

மூன்றாம்  வகுப்பு மாணவி மதிய உணவுக்காக  வீட்டுக்கு சென்ற போது விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Nileena Atholi

3000 கேரள பெண்கள் பாலியல் வன்முறை புகார் அளித்துள்ளனர், கணவர்கள்மீது!

கணவனின் பாலியல் அத்துமீறல் சட்டப்பட்ட குற்றம் என்பதையே இன்னும் பலர் அறிந்திராத நிலையில், இந்த எண்ணிக்கை எந்தவிதத்திலும் மொத்த நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கு அருகில்கூட வராது. கள்ளானாலு...


 வேலுச்சாமி

நான்கு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை: இரண்டு குழந்தைகளுடன் மீட்ட போலீசார்; பதற வைக்கும் சம்பவம்!

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், வேலுச்சாமி ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.


தாக்குதல்

மதுபோதையில் வந்த இளைஞரை அடித்து மண்டியிட வைத்த காவல் ஆய்வாளர்: சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தங்கமாபுரி பட்டினம் பகுதியில்  அர்த்தநாரி என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர்  வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.


சேவாக்- ஆர்த்தி

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவி போலீசில் புகார்: காரணம் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கின்  மனைவி ஆர்த்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார்


செயின் பறிப்பு

செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

செயின் பறிப்பு கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வரும் நிலையில் கல்லூரி மாணவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Extramarital affair

இரண்டாவது கணவரை ஏமாற்றி முதல் கணவருடன் வாழ்ந்த மனைவி கொலை!

'இது உங்க குடும்ப மேட்டர் குமாரு, சிவில் கேஸு, நாங்க இறங்குனா கோர்ட் கேஸாயிடும், பேசி தீர்த்துக்கங்க' என காவலர்கள் கைகழுவி விடபார்க்க, வெளியே வந்த குருசரண் மனைவி சுரிந்திராவை காவல்...


Officers suspended

முதல்வன் அர்ஜூன் பாணியில், சான்றிதழ் தர மறுத்த அதிகாரிகள் உடனடி சஸ்பெண்ட்!

பணியில் அலட்சியமாக நடந்துகொண்டதற்காக நான்கு அதிகாரிகளை உடனடியாக சஸ்பென்ட் செய்ய உத்தரவிட்டிருக்கிறார். மேலும், அந்த அதிகாரிகள் அரசுப்பணியில் தொடர்வதற்கு தகுதியான நபர்கள்தானா என விச...லட்சுமணன்

பைனான்சியரை கை, கால்களைக் கட்டி உப்பு போட்டு முக்குளம் ஏரியில் புதைத்த நண்பர்; தர்மபுரியில் பரபரப்பு!

கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சியர் ஒருவரை நண்பரே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆத்துல போட்டாலும் ஆன்லைன்ல போட்டாலும் அளந்துதான் போடணும்!

வங்கி கிளைகளிலிருந்து அழைப்பதாகக்கூறி ஏடிஎம் கார்டு விவரங்களை வாங்கி ஏமாற்றுவது, ஆன்லைன் லாட்டரி, கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தி ஏமாறுவது என பல்வகை ஆன்லைன் மோசடிகளில் கடந்த மூன்றாண்டுகளாக அதிகம் ஏமாறியிருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது சம்பந்தமான வழக்குகள் அதிகம் பதிவாகியிருப்பதும் தமிழ்நாட்டில்தானாம்.

Telecaller scam

2016-17ல் 4 கோடி, 2017-18ல் 41 கோடி, 2018-19ல் 11 கோடி ரூபாய் என காந்திகணக்கில் எழுதியிருக்கிறது தமிழினம். வயதானவர்கள் மற்றும் செல்போன் மற்றும் ஆப்களை சரிவர பயன்படுத்த தெரியாதவர்களைத்தான் குறிவைத்து இந்த தாக்குதல் நடக்கிறது. இந்தியாவிலேயே அதிகளவு இன்டெர்நெட் பயன்பாடு மற்றும் அதிகளவு ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் ஈடுபடும் பிரதான மாநிலங்களில் ஒன்று தமிழகம். மோசடியாளர்கள் கவனம் தமிழகம் நோக்கி வருவதற்கு இதையும் ஒரு காரணமாகச் சொல்கின்றனர் சைபர் வல்லுனர்கள். இந்திய அளவில் சில ஆண்டுகளுக்கு முன்பாக 3 லட்சம் கோடி ரூபாய் என்றளவில் நடந்த‌ ஆன்லைன் வர்த்தகம் இன்னும் 5 ஆண்டுகளில் 13 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பதின்மூன்று லட்சம் வர்த்தகத்தில் நூறில் ஒரு பங்கு என்றால்கூட 1,3000 கோடி. உசாரய்யா உசாரு!

gunaseelan Fri, 07/12/2019 - 11:44
online bank fraud Tamilnadu #1 Maximum amount swindled in TN Online fraud க்ரைம் குற்றம் உள்ளூர்

English Title

Tamilnadu leads in number of online bank frauds

News Order

0

Ticker

1 
2018 TopTamilNews. All rights reserved.