ரோகிணி தியேட்டர் தண்ணீர் தொட்டியில் ஆண் சடலம் - என்ன நடந்தது?

 
s

ரோகினி தியேட்டர் தண்ணீர் தொட்டியில் ஏழு நாட்கள் அழுகிய நிலையில் கடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது தியேட்டர் நிர்வாகத்தினர் இடையே மட்டுமல்லாது ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 சென்னையில் பிரபல திரையரங்கம் ரோகிணி தியேட்டர்.  கோயம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் இந்த ரோகிணி தியேட்டரில் நேற்று மதியம் மூன்று மணியளவில் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ராமமூர்த்தி என்பவர் சென்று இருக்கிறார்.   அப்போது தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனை ராமமூர்த்தி தண்ணீர் தொட்டி திறந்து பார்த்து இருக்கிறார் .  

ro

அப்போது துர்நாற்றம் அதிகம் வீசியிருக்கிறது.  அதன் பின்னர் அவர்கள் தண்ணீர் தொட்டிக்குள் டார்ச் லைட் அடித்து பார்த்து உள்ளார்.  அப்போது தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்ததை பார்த்து பதறிப்போய் தியேட்டர் மேனேஜருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.  மேனேஜர் தண்ணீர் தொட்டியில் ஆண் சடலம் இருப்பது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 தகவலின் பெயரில் தியேட்டருக்கு விரைந்து வந்த போலீசார் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் இருந்து ஆண் சடலத்தை மீட்டு உள்ளனர்.  தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப் துறையும் சடலத்தினை மீட்டு , சடலம் மீட்கப்பட்டதும் கீழ்பாக்கம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பதும் ரோகிணி தியேட்டரில் இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்தார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

சடலமாக மீட்கப்பட்டிருக்கும் வெங்கடேச பெருமாள் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி மது போதையில் வேலைக்கு வந்திருக்கிறார் மறுநாள் வேலைக்கு அவர் வரவில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.   சம்பவத்தன்று அன்று மது போதையில் இருந்த  பெருமாள் போதையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.