சென்னையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! உடன் படித்த நண்பர்களால் நேர்ந்த சோகம்

 
rape

சென்னையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி சமீபத்தில் நடந்த 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தார். மறு தேர்வு எழுதுவதற்காக படித்து வந்த நிலையில் அவருடைய சக நண்பர் அவரை சந்திக்க வேண்டும் என்று அழைத்துள்ளார். உடம்பு சரியில்லாமல் இருந்த 12 ஆம் வகுப்பு மாணவி நண்பரை சந்திப்பதற்காக குன்னத்தூர் சென்றுள்ளார். குறிப்பிட்ட மாணவியை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறிய மாணவர் தனது பைக்கில் போரூர் அருகே கேருகம்பாக்கம் காலி நிலத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு அவன் மற்ற நண்பர்களை அழைத்து, குழுவாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அனைவரும் தப்பி ஓடினர். 

சிறுமி அதிர்ச்சியுடன் உடல்நலம் குன்றிய நிலையில் வீடு திரும்பி பெற்றோரிடம் முழு விவரத்தையும் கூறினார். பெற்றோர் உடனடியாக போரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்து விசாரிக்கின்றனர்.