காதலனை நம்பி சென்ற 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்! ஈரோட்டில் அதிர்ச்சி
ஈரோட்டில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அடித்து துன்புறுத்திய 4 இளைஞர்களை, மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

ஈரோடு விவிசிஆர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கிருஷ்ணன் (21). கூலி தொழிலாளி. இவர், ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பயன்பாடற்ற கட்டிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து கிருஷ்ணனின் நண்பர்களான ஈரோடு சென்னிமலை சாலை மணல்மேடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (25) ,ஈரோடு சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த மணிகண்டன் (25), ஈரோடு அவல்பூந்துறை பாரதி வீதியை சேர்ந்த குகன் (23) ஆகிய 3 பேர் அங்கு வந்து கிருஷ்ணனுடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இதில், பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், கிருஷ்ணன், சந்தோஷ், மணிகண்டன், குகன் ஆகிய 4 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்து, கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.


