‘அந்த’ வீடியோவை பார்க்க 5,000 ரூபாய்! கூகுள் பே மூலம் வசூல்

 
x

 அரசு அதிகாரிகள், குடும்பப்பெண்கள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோரிடம் பெண்கள் போல பேசி பழகி அவர்களை ஆபாச வீடியோக்களை காட்டி பணம் பறிக்கும் சம்பவம்  மதுரையில் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

 அரசு அதிகாரிகளிடமும் , குடும்ப பெண்களிடமும்,  பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் வாட்ஸ்அப் மூலமாகவும் இன்ஸ்டாகிராம் மூலமாகவும் நட்பாக பேசி பழகி பின்னர் வீடியோ காலில் பேசும் அளவுக்கு  நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறது அந்த குழு.   அதன் பின்னர் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று ஆபாச காட்சியை ஓடவிடுகிறார்கள்.

ga

 வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஆபாச காட்சிகள் வருவதால் எதிர்முனையில் இருப்பவர்கள் திடீரென்று ஆபாச காட்சிகள் வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு பார்க்கும் அந்த சில நொடிகளை  ஸ்கிரீன் ரெக்கார்டு செய்து கொள்கிறார்கள்.  சிலர் சபலத்தில் தொடர்ந்து அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருப்பதையும் ரெக்கார்ட் செய்து கொள்கிறார்கள்.

 பின்னர் அவர்கள் ஆபாச வீடியோ பார்ப்பது போல் இருக்கும் அந்த வீடியோவை போட்டு காட்டி,  அதை வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்து வருகிறது அந்த கும்பல்.  5 ஆயிரம் ரூபாய் முதல் பணம் கேட்டு மிரட்டி வசூலித்து வருகிறது அந்த கும்பல்.   வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று நினைத்து அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து விடுகிறார்கள்.

 கூகுள் மூலம் இப்படி அந்த கும்பல் பணம் வசூலித்து வருகிறது.   வடமாநில கும்பல் தான் இப்படி வசூலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரியவந்திருக்கிறது.  இது குறித்த தகவல்கள்  போலீசின் கவனத்திற்கு நிறையவே தெரிய வருகிறது.   ஆனால் மதுரை போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தீவிரமாக இறங்க முடியாமல் போவதற்குக் காரணம்,  இது குறித்து யாரும்  புகார் அளிப்பதில்லை.    போலீசாரின் காதுக்கு தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றனவே தவிர பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் அதன் மூலமாக தீவிர நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்  என்கிறார்கள் மதுரை போலீசார்.

போலீஸிடம் பகிரங்கமாக புகார் தெரிவிக்காமல் சிலர் ரகசியமாக தகவல் தெரிவித்ததை அடுத்து கூகுல்பே, மொபைல் போன் எண், வங்கி கணக்கு எண்ணை வைத்து மதுரை போலீசார் ஆய்வு செய்தபோது அசாம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடைய வேலைதான் இது என்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அந்த எண்ணை ஒரு நாள் பயன்படுத்திவிட்டு அழித்து விடுகின்றார்கள்  என்பதும், ஆண்களே பெண்கள் போல பேசி மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்திருக்கிறது.