தலைக்கேறிய போதை! மனைவியின் பாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த காமுகன்
எடப்பாடி ஆலச்சம்பாளையம் அருகே 80 வயது மூதாட்டியை மது போதையிலிருந்த அவரது பேத்தியின் 22 வயதான கணவர் விக்னேஷ் கற்பழித்து அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆலச்சம்பாளையம் பகுதியில் 80 வயது மூதாட்டி வள்ளியம்மாள் என்பவர் தனியாக வசித்து வருகிறார். வள்ளியம்மாளுக்கு நான்கு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் தனியாக வசித்து வந்த வீட்டில் நேற்று இரவு தலையில் பலத்த வெட்டு காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் எடப்பாடி காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடப்பாடி போலீசார் வள்ளியம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வள்ளியம்மாளின் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வள்ளியம்மாளின் மகள் வழி பேத்தியின் கணவரான 22 வயது விக்னேஷ் என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் எடப்பாடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது விக்னேஷ் விசைத்தறி கூலி தொழில் செய்து வருவதாகவும், மதுபோதையில் தனியாக வசித்து வந்த மூதாட்டி வள்ளியம்மாள் வீட்டிற்கு சென்று கற்பழித்து அறிவாளால் வெட்டி கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து விக்னேஷை கைது செய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.