கல்யாண மன்னன் பார்த்திபன் - சினிமாவில் நடிக்க வந்து ஏமாந்து கதறும் பெண்கள்

 
pr

 கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை  அமைப்பைச் சேர்ந்தவர் பார்த்திபன்.   இவர் கோவை, நாமக்கல், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார் .    பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவுமில்லை என்று கண்ணீர் வடிக்கின்றனர்.

pa

 திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும்,  நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.  

 அந்த புகாரில் கரூர் மாவட்டத்தில் பரமத்தி அடுத்த நல்ல பாளையம் பகுதியினைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்தவர் கொங்கு இளைஞர் எழுச்சி பேரவை அமைப்பின் நிர்வாகியாகவும் உள்ளார்.   அவர் இதுவரைக்கும்  பல இளம் பெண்களை திருமணம் செய்து மோசடி செய்து வருகிறார்.  என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

re

 கடந்த 2019 ஆம் ஆண்டில் 17 வயதான சிறுமி வனிதாவான தன்னை பொள்ளாச்சியில் வைத்து திரைப்படம் எடுப்பதற்காக நேர்காணல் செய்தார்.   அப்போது குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.  மயக்கம் தெளிந்ததும்  காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு திருமணம் செய்து கொள்வதாக சொல்லி கடந்த ஏப்ரல் மாதம் வரைக்கும் கோவை புதூர் பகுதியில் தன்னுடன் பார்த்திபன் வாழ்ந்து வந்தார் என்று தெரிவித்திருக்கிறார். 

ஆனால்,  திடீர் திடீரென சில நாட்கள் வெளியூருக்கு செல்வதாக சொல்லிவிட்டு பார்த்திபன் வீடு திரும்பாததால் அவரின் செல்போனை தொடர்பு கொண்ட போது வேறு ஒரு பெண் செல்போனை எடுத்து பேசு இருக்கிறார்.   அப்போது அவர் பார்த்திபனின் மனைவி என்று சொல்லி தன்னை அவதூறான வார்த்தைகளால்  திட்டினார் என்று அந்த புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ppp

அதன்பின்னர் விசாரித்த போது தான் பார்த்திபன்  பல பெண்களை இதுபோன்று ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.  பணமோசடியும் அவர்களிடம் செய்து வந்திருக்கிறார்.   இதற்கு பார்த்திபனின் தாய்,  தந்தை உடந்தையாக இருந்து வந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.  

 நாமக்கல்லைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணையும் 2020 ஆம் ஆண்டில் திருமணம் செய்து இருக்கிறார்.  சொந்த வீடு அரசு வேலையில் இருப்பதாக சொல்லி பார்த்திபன் திருமணம் செய்து இருக்கிறார்.  திருமணம் முடிந்த சில நாட்களில்  வாடகை வீடு என்று தெரிய வந்திருக்கிறது.   எல்லாம் கண்டுபிடித்து பார்த்திபனிடம் கேட்டதற்கு தன்னை அடித்து கொடுமைப்படுத்தினார் என்கிறார் அந்த பெண்.   

 பார்த்திபனுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவர் மீது போலீசார் நடவடிக்கையை எடுக்க,  வழக்கு பதிவு செய்ய மறுக்கின்றனர்.   இதனால் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்று புலம்புகிறார்கள் அந்த பெண்கள்.