"மந்திரம் போடுறேன்னு தந்திரமா பெண்ணை மயக்கி .."சூனியம் செய்பவரிடம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி .

 
rape rape


சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை மந்திரம் போட்டு குணப்படுத்துவதாக கூறி பலாத்காரம் செய்த மாந்திரீகரை போலீஸ் கைது செய்தது .

Delhi rape
டெல்லியின் மங்கோல்புரியைச் சேர்ந்த யாமின் என்ற 45 வயதான நபர் மாந்திரீகம் செய்து பலருக்கு சிகிச்சைகள் செய்வதாக ஏமாற்றி வந்தார் .அவரிடம் கடந்த ஜனவரி 29 அன்று ,20 வயதான பெண் தனது சகோதரியுடன் உடல்நிலை சரியில்லை என்று சிகிச்சைக்கு சென்றார் . அப்போது அந்த பெண்ணின் அழகில் மயங்கிய அந்த மாந்த்ரீகம் செய்யும் யாமீன் ,அவருடன் வந்த  சகோதரியை வெளியே காத்திருக்கச் சொன்னார்.பின்னர் போதைப் பொருளை அந்த இளம் பெண்ணுக்கு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் 
அதன் பிறகு அந்த பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த பிப்ரவரி 12 அன்று தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தாயாரிடம் கூறினார் ,அதை கேட்டு அதிர்ச்சியான அவர் அந்த பெண்ணுடன் சென்று காவல்துறையில் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து அந்த யாமீனை தேடினர் 
பிறகு யாமின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு திங்கள்கிழமை சீமாபுரியில் பதுங்கியிருந்த யாமீனை போலீசார் கைது செய்தனர் .