என்னோட பிராந்தியை எடுத்து அடிக்கடி குடித்துவிடுவார் என் மனைவி! சரண்யா கொலைக்கு காரணம் பனியாரமில்லையாம்!

 
ப்ர்

பணியாரம் ருசியாக இல்லை என்று சரண்யா சொன்னதால் ஆத்திரமடைந்த லட்சுமணன் அவரை அடித்து கீழே தள்ளி கொன்று விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தனக்கு வாங்கி வைத்திருந்த பிராந்தியை சரண்யா  குடித்து விட்டதால் தான் ஆத்திரத்தில் அடித்துக் கொன்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்திருக்கிறார் லட்சுமணன்.

 சேலம் மாவட்டத்தில் ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் அடுத்த காலனி பகுதியை சேர்ந்தவர்கள் லட்சுமணன்- சரண்யா.  இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.  

ச

 கணவன்-மனைவி இருவருமே கூலிவேலை செய்து வந்திருக்கிறார்கள்.    இருவருக்குமே மது அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது.  கடந்த சில தினங்களுக்கு முன்பாக சரண்யா திடீரென்று இறந்து விட்டதாக ஈரோட்டில் உள்ள அவரது தம்பி நந்தகுமாருக்கு லட்சுமணன் தகவல் தெரிவித்திருக்கிறார்.   பதறியடித்து வந்த நந்தகுமார் தனது அக்காவின் சாவில் சந்தேகம் இருப்பதாக  தீவட்டிப்பட்டி போலீசில் தகவல் தகவல் அளித்திருக்கிறார்.

போலீசில் புகார் அளித்ததுமே லட்சுமணன் தலைமறைவாகிவிட்டார்.   இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.    இதற்கிடையில் தலைமறைவாக இருந்த லட்சுமணனை போலீசார் தேடி வந்தனர்.

 உறவினர்களிடம் நடத்திய விசாரணையில்,   கடந்த 6ஆம் தேதி அன்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த லட்சுமணன்,   மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பனியாரம் வாங்கிக்கொண்டு வந்தார்.    அதை சாப்பிட்டு பார்த்த சரண்யா,   பனியாரம் ருசியாக இல்லை இதைப் போய் இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா என்று கேட்டு கேட்டிருக்கிறார்.    இதனால் ஆத்திரப்பட்ட லட்சுமணன் சரண்யாவை அடித்து கீழே தள்ளியிருக்கிறார். . இதில் சரண்யா உயிரிழந்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர் 

ர்

இந்த நிலையில் போலீசாரின் தீவிர வேட்டையில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த லட்சுமணனை உடனே கைது செய்தனர்.   அவரிடம் நடத்திய விசாரணையில்,   நான் எனக்காக வாங்கி வைக்கும் பிராந்தியை  அடிக்கடி என் மனைவி எடுத்துக் குடித்துவிடுவார்.   இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். 

 அப்படித்தான்  கடந்த ஆறாம் தேதி அன்று இரவும் நான் எனக்காக வாங்கி வைத்திருந்த பிராந்தியை எடுத்து என் மனைவியைத் குடித்துவிட்டார்.  இதில் ஆத்திரப்பட்டு நான் அவரைக் கீழே தள்ளினேன்.   அப்போது கீழே விழுந்த சரண்யாவின் தலையில் அடிபட்டு இறந்து விட்டார் என்று தெரிவித்திருக்கிறார்கள்.  இதை அடுத்து லட்சுமணனை  ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.