குழாயடி சண்டை: மாமியாரை அடித்துக் கொன்றுவிட்டு மருமகள் தற்கொலை

 
m

குழாயடி சண்டையில் மாமியாரை மண்வெட்டியால் அடித்து கொலை செய்து விட்டு போலீஸ் பயத்தில் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். எடப்பாடி பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 சேலம் மாவட்டத்தில் எடப்பாடி வட்டத்தில் இருக்கும் குரும்பப் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பன்- தைலம்மாள்.  தைலம்மாளுக்கு மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர்.    கடைசி மகன் மெய்வேல் ஓட்டுநராக இருந்து வருகிறார்.   இவரது மனைவி செல்வி.

மருமகள் செல்விக்கும் மாமியார் தைலம்னாளுக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  தெரு குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது அடிக்கடி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  

su

 இந்த நிலையில் நேற்றைய தினமும் தண்ணீர் தண்ணீர் பிடிப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.   இந்த குழாயடி சண்டையில் ஆத்திரமடைந்த மருமகள் செல்வி மண்வெட்டியை எடுத்து மாமியாரின்  தலையில் ஓங்கி அடித்திருக்கிறார்.  இதில்  கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்திருக்கிறார். 

சத்தம் கேட்டு ஓடிவந்த மெய்வேல்,  ஆம்புலன்ஸ் வரவழைத்து எடப்பாடி அரசு மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்து இருக்கிறார்.   தைலம் மாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.   இந்த தகவல் செல்விக்கு தெரிய வந்திருக்கிறது .  மாமியாரை அடித்துக் கொன்று விட்டதால்  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என்று பயந்ததால் வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 மாமியாரை அடித்துக் கொலை செய்ததோடு  தன்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என்று சேலையில் தூக்கிட்டு மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது கொங்கணாபுரம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமியாரின் உடல் பிரேதனையை பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அதே எடப்பாடி அரசு மருத்துவமனையில் தான் மருமகள் செல்வியின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறது.