பேராசிரியர், மாணவர்களால் கெமிஸ்ட்ரி மாணவி தொடர் பாலியல் வன்கொடுமை - சென்னை ஐஐடி கொடுமை

 
iit

பேராசிரியர் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களால் கெமிஸ்ட்ரி மாணவி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வந்திருக்கிறார்.  இது குறித்து புகார் அளித்தும் 9 மாதங்களாக எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.

  இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி.  இங்கு கெமிஸ்ட்ரி ஆராய்ச்சி மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார்.   அந்த மாணவிக்கு அந்தத் துறையில் உதவிப் பேராசிரியர் மற்றும் உடன் பயின்ற மாணவர்களால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார்.

t

 இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவியின் பரிதாபநிலை பார்த்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  ஆனால் புகார் அளித்து ஒன்பது மாத காலங்கள் ஆகியும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த குற்றவாளிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை  என்று கூறப்படுகிறது.

 மாணவியை சாதி ரீதியாகவும் அவர்கள் இழிவு படுத்தியதாக அளித்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்,   வழக்கு பிரிவு 376 எஸ்சி /எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

 இந்த விவகாரத்தில் மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி இருக்கிறார்கள். சென்னை ஐஐடியில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பாலியல் அத்துமீறல்கள் நடந்து வருகின்ற நிலையில் இந்த குற்றச்சாட்டு அதிர வைக்கிறது.