அதிர்ச்சி வீடியோ: நடுரோட்டில் காதலியை கொடூரமாக தாக்கும் காதலன்

 
ch

நடுரோட்டில் காதலியை கொடூரமாக தாக்கி விட்டு மயக்கம் அடைந்ததும் அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்று இருக்கிறார் காதலன்.  இந்த வீடியோ வைரலாகி பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.   பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம் .


மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தில் மவுகஜ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 21ஆம் தேதி அன்று காதலியுடன் சென்றிருக்கிறார் அந்த வாலிபர்.  அப்போது நடுரோட்டில் இருவருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட காதலியை கொடூரமாக அடித்து கீழே தள்ளுகிறார்.  பின்பு அந்த காதலியின் முகத்திலும் கழுத்திலும் ஆவேசமாக தாக்கி இருக்கிறார்.

 இதில் அந்த பெண் மூர்ச்சையாகி மயங்கி விடுகிறார்.   உடனே  காதலியை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார் அந்த வாலிபர்.  அந்த பெண் முழுவதுமாக மயங்கி விட்டதால் அந்த பெண்ணால் நிற்க முடியவில்லை.  இதனால் பயந்து போன அந்த வாலிபர்,  காதலியை சாலையில் அப்படியே போட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி இருக்கிறார் .

நீண்ட நேரமாக அந்த பெண் அங்கேயே மயங்கி கிடந்திருக்கிறார்.  அப்பகுதி  கிராமத்து மக்கள் அங்கு வந்து போலீசுக்கு தகவல் அளிக்க,  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.  அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 கொடூரமாக காதலியை தாக்கும் இந்த வீடியோ வைரலாகி பலரும் கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர் . இதையடுத்து போலீசார் தீவிர தேடுதலில்  ஈடுபட்டு கைது செய்துள்ளனர் போலீசார்.