மனைவிக்கு விசித்திரமான பாலியல் தொல்லை -ஆபாச புகைப்படங்களை மாமனாருக்கும் அனுப்பி வைத்த மருமகன்

 
lஅ

 மனைவிக்கு விசித்திரமான பாலியல் தொல்லைகள் கொடுத்த வந்த கணவர்,  மனைவியின் ஆபாச புகைப்படங்களை மாமனாருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கும் செயல்  ஏற்றுக்கொள்ள முடியாது.  அவர் மீது போலீசார் சரியான விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தெரிய வருகிறது.  ஆகவே அவர் மீது கூடுதல் விசாரணை நடத்தி  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் வசித்து வரும் அந்த பெண்ணின் கணவர் கம்ப்யூட்டர் என்ஜினியராக உள்ளார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஐஐடியில் படிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   திருமணத்திற்கு பின்னர் அந்த பெண்ணும் கம்ப்யூட்டர் என்ஜினியரும் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார்கள்.

ல்ல்

 திருமணமான மூன்று மாதங்களிலேயே  அந்த பெண்ணுக்கு கம்ப்யூட்டர் என்ஜினியர்  விசித்திரமான பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டுகிறார் அந்த பெண்.   மேலும் தன்னை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து அதனை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்புவதாக அதை வைத்து கணவர் தன்னை மிரட்டுவதாகவும் மனைவி குற்றம் சாட்டியிருக்கிறார் .  இதனால் கணவருடன் வாழ பிடிக்காமல் பிரிந்து சென்று பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்கிறார் அந்த பெண்.

இரண்டு வீட்டு பெற்றோரும்  சமாதானம் செய்து வாழ வைத்துள்ளனர்.  கடந்த 2016ஆம் ஆண்டில் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாகவும் மீண்டும் அந்தப் பெண் கணவர் மீது குற்றம் சாட்டி அவருடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்று பெற்றோர் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.  இதன் பின்னர் பெங்களூரு போலீசில் கணவர் மீது புகார் அளித்திருக்கிறார் .

க்

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை கைது செய்திருந்தனர் . பின்னர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார் .  இதையடுத்து தான் கொடுத்த புகாரின் பேரில் கணவர் மீது போலீசார் சரியான நடவடிக்கை எடுத்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.  தனது ஆபாச புகைப்படங்களை தனது தந்தைக்கும் நண்பர்களுக்கும் எனது கணவர் அனுப்பி வைத்திருக்கிறார் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அந்தப் பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு,   இந்த வழக்கின் விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளித்திருக்கிறார்கள்.    மனைவிக்கு விசித்திரமான பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் மனைவியின் ஆபாச புகைப்படங்களை மாமனாருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்திருப்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று. அதனால் இந்த வழக்கில் போலீசார் முறையான விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது போல் தெரிய வருகிறது .   ஆகவே,  கம்ப்யூட்டர் என்ஜினியர் மீது கூடுதல் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.