வீடியோவால் இளம்பெண் மரணம் - கடிதத்தால் சிக்கிய கல்லூரி மாணவர்கள்

 
sஉ

 பதினெட்டு வயது இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இளம்பெண் தற்கொலையில் கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தானே பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே பகுதியில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருந்து 18 வயது இளம்பெண் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.  

 அப்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து அறிய அவரின் அறை முழுவதும் தேடிப் பார்த்ததில் தற்கொலைக்கு முன்பாக அப்பெண் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.   அந்த கடிதத்தில்,   நண்பர்களின் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதி இருந்திருக்கிறார்.   அதில் எழுதி இருந்த நண்பர்களிடம் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது,   பெண் உள்பட அந்த எட்டு பேரில் பாதி பேர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. 

வொ

 அவர்களிடம் அந்தப் பெண்ணுக்கு என்ன தொந்தரவு கொடுத்தீர்கள் என்று துருவித் துருவி போலீசார் விசாரணை நடத்தியபோது,   மிரட்டி வலுக்கட்டாயமாக வீடியோ எடுத்தோம்.   வீடியோ எடுத்ததால் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளானார்.  இதனால் தான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் .

இதையடுத்து 8 பேரையும் கை செய்துள்ள போலீசார் மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.   வீடியோ எடுத்தது மட்டுமில்லாமல் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்களா?  அந்த வீடியோவை காட்டி தொடர்ந்து மிரட்டி வேறு ஏதேனும் தொல்லை கொடுத்து வந்தார்களா?  என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 நண்பர்களால் ஒரு பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தானே பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.