5 பேரும் அரசியல் பெரும்புள்ளிகளின் வாரிசுகள்! ஓடும் காருக்குள் 2 மணி நேரம் சிறுமிக்கு நடந்த கொடுமை

 
gr

ஓடும் காருக்குள் வைத்து 2 மணி நேரம் சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இந்த குற்றவாளிகள் அனைவருமே தெலுங்கானாவின் அரசியல் பெரும்புள்ளிகளின் வாரிசுகள் என்பது தெரியவந்துள்ளதால் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் கடந்த சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு  வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை காரில் அழைத்து சென்றிருக்கிறார்கள் ஐந்து ஆண் நண்பர்கள்.  இந்த ஐந்து பேரும்  தெலுங்கானாவின் அரசியல் பெரும் புள்ளிகளின் வாரிசுகள். இதில் மூன்று பேர் 11ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு படிக்கும் சிறுவர்கள்.

cr

அந்த சிறுமியுடன் பப்புக்கு சென்ற அவர்கள் அதிகாலையில்தான் பப்பை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.   அந்த சிறுமியை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வருவதாக சொல்லிக்கொண்டு காரை எடுத்திருக்கிறார்கள்.  ஆனால் நேராக அந்த சிறுமியின் வீட்டிற்குச் செல்லாமல் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரில் வலம் வந்துகொண்டே,  காருக்குள் வைத்தே அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.  

பின்னர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஒருவர் காருக்குள் பாலியல் வன்கொடுமை செய்தபோது மற்றவர்கள் காருக்கு வெளியே காவலுக்கு நின்றிருக்கிறார்கள்.  இப்படி 2 மணி நேரம் அந்த சிறுமிக்கு காருக்குள் கொடுமை நடந்திருக்கிறது.   அதன்பின்னர் அந்த சிறுமியை வீட்டருகே இறக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

சிறுமியின் கழுத்தில் இருந்த காயத்தையும், மனதளவில் உடலளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தையும் பார்த்து தந்தை விசாரித்தபோது பப்புக்கு போய்விட்டு திரும்புகையில் நேர்ந்துவிட்டது என்று சொல்லி இருக்கிறார்.  ஓரளவு புரிந்துகொண்ட தந்தை போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.   மகளிர் போலீஸ் வந்து விசாரித்தபோதுதான் முழுவதையும் சொல்லி இருக்கிறார்.  ஐந்து பேரில்  ஒருவர் பெயரை மட்டுமே அந்த சிறுமி உச்சரித்திருக்கிறார்.

gl

மேற்கொண்டு தகவல் எதுவும் அந்த சிறுமியிடம் பெற முடியவில்லை. அவரால் எதையும் சொல்லக்கூடிய மனநிலையில் இல்லை என்பதை புரிந்துகொண்ட போலீசார், பப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் ஐந்து பேர் சிக்கியிருக்கிறார்கள். அதில் இருந்த 5  பேரும் தெலுங்கானா அரசியல் பெரும் புள்ளிகளின் வாரிசுகள் என்பது தெரியவந்திருக்கிறது. அதில் மூன்று பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.  அதில் ஒருவரை கைது செய்துள்ளனர் போலீசார்.

அரசியல் அழுத்தத்தின் காரணமாகத்தான் மற்றவர்களை கைது செய்யவில்லை என்றும், பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யாமல் பாலியல் தொந்தரவு வழக்கு என்று போலீசார் பதிவு செய்திருந்ததையு பாஜகவினர் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர்  5 பேர் மீதும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கை போக்சோ சட்டபிரிவுக்கும் மாற்றி இருக்கின்றனர் போலீசார்.