கணவன், குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனுடன் வாழ்ந்த பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

 
a

 கணவன், குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன்  வசித்து வந்த இளம் பெண் பூட்டிய வீட்டிற்குள் இருந்த அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடன் வசித்து வந்த கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய குப்பம் பகுதியில் கம்பர் தெருவில் வசித்து வந்துள்ளார்கள் ஜோதிஸ்வரன் -அமுதா.   கடந்த  சில மாதங்களாகத்தான் இவர்கள் அப்பகுதியில் வசித்து வந்திருக்கிறார்கள்.   இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அந்த வீடு பூட்டிய நிலையில் கிடந்திருக்கிறது.   வீட்டிற்குள் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியிருக்கிறது.   கடுமையாக துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்திருக்கிறார்கள்.

aam

 சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தால் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்திருக்கிறது.  போலீசார் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் அமுதா என்பது தெரிய வந்தது.   அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவருடன் வசித்து வந்த ஜோதீஸ்வரன் கணவர் இல்லை.   இருவருமே கள்ளக்காதலர்கள் என்பதும்,  கள்ளக்காதல் ஜோடி கணவன் மனைவி போல் வீடு எடுத்து தங்கி வந்ததும் தெரிய வந்திருக்கிறது.

அதே  திருவள்ளூர் மாவட்டத்தில் எருமை வெட்டி பாளையத்தை சேர்ந்தவர் அமுதா.   இவரின் கணவர் பாபு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் பாபுவுக்கும் அமுதாவுக்கும் திருமணம் நடந்திருக்கிறது. இத் தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனர்.    இந்த நிலையில் தான் அமுதாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி ஈஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.    இந்த பழக்கம் கள்ள உறவாக மாறி இருக்கிறது.  

 ஜோதீஸ்வரனுடன்  அடிக்கடி வெளியே சென்ற குடித்தனம் நடத்துவதும், பின்னர் மீண்டும் வந்து கணவனிடம்  சமாதானமாக வாழ்ந்து வருவதும் வழக்கமாக வைத்திருந்துள்ளார் அமுதா.   கடந்த சில மாதங்களுக்கு முன் கணவர் பாபுவையும் குழந்தைகளையும் தவிக்க விட்டு ஜோதீஸ்வரன் உடன் மீண்டும் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார்.  

 அவர் உயிரிழந்த மூன்று நாட்களாக இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.   அதே நேரம் அமுதாவுடன் தங்கி இருந்த ஜோதீஸ்வரன் தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடித்தால் தான் அமுதாவின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்பதால்,  வழக்கு பதிவு செய்து ஜோதீஸ்வரனை தேடி வருகின்றனர் போலீசார்.