சிக்கியது வீடியோ ஆதாரம்! 11 ஆண்டுகள் பாலியல் தொல்லை- தீ வைத்து எரிப்பு - மனைவியுடன் சேர்ந்து முதலாளி செய்த கொடூரம்

 
கொ

பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு பாத்தூரூமுக்குள் தள்ளிவிட்டு கதவை சாத்திக்கொண்ட கொடூர சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்துவிட்டார்.  முதலாளியும் அவரது மனைவியும் தலைமறைவாகி விட்டார்கள். 

 ஈரோடு மாவட்டம் கர்ணா புரத்தைச் சேர்ந்த 37 வயதான அந்த பெண் திருமணமாகி 12 இரண்டு ஆண்டுகள் ஆகிறது .  கருத்து வேறுபாட்டினால் கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.   அப்பகுதியில் இருந்த சிமெண்ட் டைல்ஸ் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்திருக்கிறார்.  அப்போது அந்த கடையின் உரிமையாளர் நவநீதன் இந்த பெண்ணிடம் நெருங்கிப்பழகி வந்திருக்கிறார். 

 கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதால் தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி வந்திருக்கிறார்.  வேலையின் காரணமாக இந்தப் இன்னும் கொஞ்சம் இறங்கி போய் இருக்கிறார்.   இந்தப் பெண்ணுடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார் . இந்த விவகாரம் அந்த முதலாளியின் மனைவிக்கும் தெரியவந்திருக்கிறது.  அத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பதால் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த அவர்கள் தன் கணவன் இப்படி செய்வதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

கொவ்

அந்த முதலாளியின் மனைவிக்கு தெரிந்தே இந்த பெண்ணிடம் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார் நவநீதன்.   11 ஆண்டுகளாக விநாயகா செராமிக்ஸ் டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்திருக்கிறார் அந்தப் பெண்.   இதுவரைக்கும் ஆறு முறை கர்ப்பம் அடைந்து இருக்கிறார்.   6 முறையும் அந்த கடையின் முதலாளி கருவை கலைக்கச் சொல்லி இருக்கிறார்.   இந்த பெண்ணும் கருவை கலைத்து இருக்கிறார்.   தற்போது கடை முதலாளியின்  பாலியல் தொல்லை தொல்லை அதிகமாகவே கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள  நவநீதன் வீட்டிற்குச் சென்று முறையிட்டிருக்கிறார் அந்தப்பெண்.  

 அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்று விடுவதாக நவநீதன்,  அவரது மனைவி அகிலா தன்னை மிரட்டுவதாக அந்தப் பெண் கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.   வீடியோவும் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

ஃபி

 இந்த நிலையில்தான் நவநீதன் வீட்டில் தீக்குளித்து உடல் கருகி கிடந்த அந்த பெண்ணை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில்  சேர்த்து இருந்தனர் . அப்போது அந்த பெண்ணிடம் வாக்குமூலம் கேட்டபோது ,  நவநீதனும் அகிலாவும் என் மீது பெட்ரோல் ஊற்றி பாத்ரூமுக்குள் தள்ளி 2 மணி நேரம் அடைத்து விட்டார்கள்.   தீப்பற்றி எரிந்ததில் கதறி துடித்தேன்.   அதன் பின்னர் தான் கதவை திறந்து விட்டார்கள்.  ஆனால் அவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததை சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் உன் குடும்பத்தினரை சென்று விடுவேன்.  வயிற்று வலியால் நீயாக தீக்குளித்ததாக சொல்ல வேண்டும் என்று மிரட்டினார்கள் என்று வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.

 இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து நவநீதன், அகிலாவை 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.   இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டார்.   இதனால் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.