"ஷேர் ஆட்டோவில் வந்த மாணவியை ஷேர் பண்ணி ..."ஆட்டோ ட்ரைவர் உள்பட பலரால் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

 
rape rape


ஷேர் ஆட்டோவில் வந்த மாணவியை பலர் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

gang
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவின் ஃபிரோசாபாத்தின் துண்ட்லா பகுதியில் 22 வயது பிஜி கல்லூரி மாணவியொருவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் .அவர் தினமும் கல்லூரிக்கு அங்குள்ள ஷேர் ஆட்டோவில் சென்று வருவது வழக்கம் .இதை அந்த ஷேர் ஆட்டோ ட்ரைவர் உள்பட சிலர் நோட்டமிட்டு வந்துள்ளார்கள் .
இந்நிலையில் அந்த மாணவி கடந்த ஞாயிற்று கிழமை வழக்கம்போல அந்த ஷேர் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்று விட்டு மதியம் 2 மணியளவில்  வீட்டுக்கு  வந்து கொண்டிருந்தார் ,அப்போது அவரின் அருகில் அமர்ந்திருந்த மற்ற அனைவரும் வேறொரு இடத்தில்  இறங்கியதும் அந்த பெண் மட்டும் அந்த ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார் .அப்போது அந்த ஆட்டோவில் இரு வாலிபர்கள் திடீரென்று ஏறி அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தனர் ,அந்த பெண் சந்தேகப்பட்டு ஆட்டோவை நிறுத்த சொன்னார் .ஆனால் அவர்கள் அந்த ஆட்டோவை ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் நிறுத்திவிட்டு அந்த மாணவியை அனைவரும் சேர்ந்து பலாத்காரம் செய்தனர் .அதை வீடியோவும் எடுத்து வைத்து கொண்டனர் .அதன் பின்னர் அந்த மாணவி போலீசில் சென்று தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி  புகாரளித்ததும் ,போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ ட்ரைவர் உள்பட சிலரை கைது செய்தனர் .மேலும் சிலர் மீது வழக்கு பதிந்து  தேடி வருகின்றனர்