அக்காவுடன் கடைக்கு சென்ற 10 வயது சிறுமியின் வாயை பொத்தி பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் பட்டபகலில் நடந்த கொடூரம்

 
rape rape

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் டிபன் வாங்க அக்காவுடன் கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை வாயை பொத்தி தகாத செயல்களில் ஈடுபட்ட நபரை அப்பகுதி மக்கள் அடித்து காவல்துறை துறையினரிடம் ஒப்படைத்தனர்.

rape

கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை நீடாமங்கலம் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (வயது 32. ) நீடாமங்கலம் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் 10 வயது சிறுமி தனது அக்காவுடன் டிபன் வாங்குவதற்கு வந்துள்ளார். கடைக்குள்ளே அக்கா டிபன் வாங்கிக் கொண்டிருக்கும்போது வெளியில் நின்ற பத்து வயது சிறுமியை அங்கே மது போதையில் இருந்த முத்துராஜ் வாயை பொத்தி தகாத செயல்களில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து சிறுமியின் அக்கா கூச்சலிட்டார்.

இதனை கவனித்த அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு முத்துராஜை அடித்து நாச்சியார் கோவில் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது பற்றி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரினை தொடர்ந்து ஆடுதுறையில் உள்ள திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தார் போக்சோ வழக்கு பதிவு செய்து முத்துராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.