10ம் வகுப்பு படிக்கும் சிறுமி கர்ப்பம்! காரணம் 52 வயது முதியவரா? 16 வயது சிறுவனா? என குழப்பம்

 
அச் அச்

ஆண்டிப்பட்டி அருகே 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் உறவுகொண்ட 52 வயது நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை வீடியோ எடுத்ததாக மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த 16 வயது சிறுவனால், சிறுமி கர்ப்பமானதால் 2 நபரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி அருகே 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: 3 ஆசிரியர்கள் மீது பரபரப்பு  புகார்- 8th class student pregnant case police case against 3 teachers

தேனிமாவட்டம், ஆண்டிபட்டி அருகே ராயவேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாலக்கோம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியிடம் அதே ஊரை சேர்ந்த 52 வயதாகும் பிச்சைமணி என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை தனது வலையில் விழவைத்தார். அதன்பின்னர் அந்த சிறுமியுடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் இருவரும் தனிமையில் இருந்ததை அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன்  தனது செல்போனில் படம் பிடித்துள்ளதாகவும், தன் ஆசைப்படி நடக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அடிபணிய வைத்தார். அதன் பின்னர் அந்த சிறுவனும் சிறுமியுடன் பலமுறை உறவு வைத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில்  கடந்த சிலமாதங்களாகவே சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை அவரது தாயார் ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும் கூறியதைக் கண்டு சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் அந்த சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த அனைத்தையும் விவரமாக கூறியுள்ளார். அதனைக்கேட்டு மனம் உடைந்த அவரது தாயார் இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி உறவு வைத்த பிச்சைமணியையும், சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சிறுவனையும் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.