மனைவி, மகள்களை வெட்டிக் கொன்ற கொடூர கணவன்
Jun 21, 2025, 11:15 IST1750484712965
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குடும்பப் பிரச்சனையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிந்நாதபுரத்தில் குடும்பத் தகராறில் கணவன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொலை செய்துள்ளார். திருவிருந்தாள்புரத்தில் மனைவி பூங்கொடி, ஜெயதுர்கா (10), ஜெயலட்சுமி (7) அதிகாலையில் கொலை செய்யப்பட்டார். மூவரையும் கொன்ற கணவன் சுந்தரவேலு போலீசில் சரண் அடைந்தார். உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


