ஜாமீனுக்கு உதவாத நண்பன் அடித்துக்கொலை! இளைஞர்கள் வெறிச்செயல்

 
a

 சிறையில் இருந்த போது ஜாமீனில் எடுக்க உதவவில்லை என்பதற்காக சக நண்பரை ஆறு பேர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்.  அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் சாண சந்திரத்தைச் சேர்ந்தவர் முபாரக்.   ஓசூரில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.  சில தினங்களுக்கு முன்பு ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட்டில் உள்ள கட்டிடத்தின் மாடியில் மது பாட்டிலால் அடித்து கொலைசெய்யப்பட்டு கிடந்தார். 

 தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பின்னர்,   சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.    மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் .

அர்ர்

போலீசாரின் விசாரணையில் நண்பர்கள் சேர்ந்து மதுபாட்டினால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.   இதை அடுத்து இம்ரான், முகமது இலியாஸ், அப்துல் ரஹீம், முபாரக், கலீல் ஆகிய நண்பர்கள்தான் கொலை செய்தது தெரியவந்திருக்கிறது.

இதில் கலிமுல்லா,  முபாரக் மீது வழிப்பறி மற்றும் பைக் திருட்டு வழக்குகள் உள்ளன.   இவர்கள் வழிப்பறி செய்யும் பணத்தில் நண்பர்கள் அனைவரும் மது அருந்தி உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.   வழக்குகளில் சிக்கியதால் அவ்வப்போது சிறைக்கும் சென்று வந்துள்ளனர்.

 கலிமுல்லா அண்மையில் சிறைக்கு சென்றிருந்தபோது உயிரிழந்த முபாரக் உதவிக்காக வரவில்லை. ஜாமீனில் எடுக்க உதவவில்லை  என்கிற ஆத்திரத்தில் நண்பர்கள் இருந்திருக்கிறார்கள்.   கலிமுல்லா சிலைக்கு சென்று வந்த பின்னர் அவரை தொடர்ந்து  கேலியும்  செய்து வந்திருக்கிறார் முபாரக்.  இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள், உதவியும் செய்யாமல் கிண்டல் செய்து வந்ததால் முபாரக்கை கொன்று விட திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி ஓசூர் எம்ஜிஆர் மார்க்கெட்டுக்கு வர வைத்து மது அருந்த வைத்திருக்கிறார்கள்.  போதை தலைக்கு ஏறியதும் மதுபாட்டிலால் அடித்து,  பின்னர் குத்தி கொலை செய்திருக்கிறார்கள் .  இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை ஓசூர் நகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.