திருவள்ளூரில் மீண்டும் அதிர்ச்சி! சிறுமியை வாய் மூடி கடத்தி சென்ற வடமாநில தொழிலாளர்

 
rape rape

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியில் வாய் மூடி பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட போது சிறுமி அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த வடமாநில வாலிபரை போக்சோவில் போலீசார்  கைது செய்தனர்.

rape

திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.  இந்நிலையில்  தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில்  விஜிகே .புரம்  கிராமத்தில் 18 வயது சிறுமி  அவரது வீட்டிற்கு அருகில்  இயற்கை உபாதை கழிக்க முட்புதருக்குள் சென்ற போது வாலிபர் ஒருவர் சிறுமி வாய் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமி அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அப்பகுதியிலிருந்த பொதுமக்கள்  ஒடி வந்து தப்பியோடிய நபரை சுற்றி வளைத்து அடித்து உதைத்து கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமி வாய் மூடி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சிறுமியின் தாய் புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

திருத்தணி டிஎஸ்பி கந்தன் மற்றும் போலீசார் சிறுமியின் பெற்றோர் மற்றும்  கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாகதிருவாலங்காடு காவல்ஆய்வாளர் நரேஷ் வழக்குப்பதிவு செய்து வாலிபரிடம் விசாரணையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எரோமல் அலி(27) இவர்  கனகம்மாசத்திரம்  பகுதியில்தங்கி  தேசிய நெடுஞ்சாலையில் ஒரு  மாதமாக  வேலை செய்து வந்ததும், இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமியின்  வாய் அடைக்க முயன்றது  உறுதிப்படுத்தப்பட்டு அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஆரம்பாக்கம் பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம்  சம்பவத்தில் வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.