தந்தையை பழிவாங்க மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட உறவினர் கைது

 
ஆபாச இணையதளங்களின் மாயவலையில் இருந்து தப்புவது எப்படி? டாக்டர் ஷாலினியின் ஓபன் டாக்!

கோவையை சேர்ந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை  ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.   

 A relative who posted an obscene picture of a young girl on Instagram was arrested    இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து  இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உறவினர் கைது

திருப்பூர் மாவட்டம் திருநீலகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (32). இவர் சொந்தமாக அச்சகம் வைத்து நடத்தி வந்தார். இவருடைய உறவினர்கள் கோவை குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது உறவினர்களுக்கும், சதீசுக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் உறவினர்களை பழிவாங்குவதற்காக உறவினரின் 25 வயதான மகள் ஒருவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை போலியாக உருவாக்கி உள்ளார். அதில் அந்த இளம் பெண்ணின் புகைப்படங்களை ஆபசமாக சித்தரித்து சமூகவலைத்தளத்தில் சதீஸ் பதிவிட்டு உள்ளார். மேலும் அந்த இளம் பெண்ணை தவறான உறவுக்கு அழைக்கலாம் என்றும், பெண்ணின் தொடர்பு எண்ணையும் பதிவிட்டு இருந்தார். 

இதனை பார்த்த ஆண்கள் பலர் அந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அதன்பிறகு தான் அந்த இளம் பெண்ணுக்கு தனது பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு உருவாக்கி தனது செல்போன் எண்ணுடன் ஆபாசமாக புகைப்படத்தை சித்தரித்து வெளியிட்டது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளம் இதுகுறித்து உடனடியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சதீஸ் மீது பெண்வண்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து திருப்பூரில் பதுங்கி இருந்த அவரை சைபர் கிரைம் ஆய்வாளர் அருண், உதவி ஆய்வாளர் முத்து உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார் நேற்று சதீசை கைதுசெய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.