வீடு புகுந்து பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு! நெல்லையில் பரபரப்பு

 
a a

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் 11ம் வகுப்பு மாணவனை கூனியூர் பகுதியைச் சேர்ந்த 5 சிறார்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் 11ம் வகுப்பு மாணவனை கூனியூர் பகுதியைச் சேர்ந்த 5 சிறார்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். இது தொடர்பாக சேரன்மகாதேவி காவல்துறையினர் 5 சிறார்களை பிடித்து கூர்நோக்கி இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் 11ம் வகுப்பு மாணவன் கூனியூர் பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்ததாகவும் அவரது உறவினரான சிறார்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “
சேரன்மகாதேவி பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வரும் 2 மாணவர்களுக்கு இடையில் பள்ளியில் நண்பர்களுடன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட வாய் தகராறு தொடர்ந்து எதிர் தரப்பு மாணவருடன் சேர்ந்து 11ஆம் வகுப்பு மாணவனை சிலர் தாக்கியுள்ளனர். காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.b பாதிக்கப்பட்ட மாணவரிடம் இருந்து வாக்கு மூலமும் பெற்று காவல்துறையினர் 5 சிறார்கள், பிடித்து கூர்நோக்கி இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் முற்றிலும் நண்பர்களுடன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு. இந்த சம்பவத்தினை சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட இரு சமூகத்தைச் சார்ந்த நபர்களுக்கிடையே நடைபெற்ற தாக்குதல் என்று தவறாக தகவல்கள் சித்தரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருமே பல சமூகத்தை சேர்ந்தவர்களாக கருதப்படுகிறது. சமூக ரீதியான முன் விரோதத்தில் இச்ச சம்பவம் நடைபெறவில்லை. பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதை சமூக வலைதளங்களில் தவறாக பரப்புவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.