திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய கள்ளக்காதலியை அடித்து கொன்ற வாலிபர்

 
murder murder

சேலத்தில் தனியார் மருத்துவமனை மேலாளருடன்  இரவு சினிமா காட்சிக்கு சென்றுவிட்டு வந்து, இருவரும் தனிமையில் இருந்தபோது ஏற்பட்ட தகராறில்  டியூசன் டீச்சர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சேலம் மாநகர் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி.  திருமணம் ஆகாத இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். பாரதியின் தந்தை அதிமுக பிரமுகராக இருந்த டில்லி ஆறுமுகம் ஆவார் . இவர் கடந்த 25  ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் அதிமுக பிரமுகராக வலம் வந்தவர் ஆவர்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டில்லி ஆறுமுகம் இறந்துவிட்டார். இதனால் இதுவரை திருமணமாகாத  34 வயதான பாரதி , சங்கரநகர் பகுதியில் டியூஷன் சென்டர் ஒன்றை நடத்திக் கொண்டு ,  ஆசிரியையாக இருந்து வந்தார். மேலும் இரவில் டியூசன் சென்டரிலேயே பாரதி தங்கிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் பாரதிக்கும், சேலம் தனியார் மருத்துவமனை மேலாளர் 
உதயசரண்(49) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் அவ்வப்போது இரவு நேரங்களில்  உதயசரண்  டியூஷன் சென்டரிலேயே பாரதியுடன் தங்கி தகாத உறவில் ஈடுபட்டு  வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும்,  சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள சினிமா தியேட்டருக்கு சென்று இரவு காட்சி பார்த்துவிட்டு வந்து, மீண்டும் டியூசன் சென்டரில் தங்கி உள்ளனர். இருவருக்கும் மதுப்பழக்கம் மற்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் பாரதி சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் உதயசரண் பாரதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பாரதி மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து உதயசரண், ஆம்புலன்ஸ் மூலமாக தனது தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.  அப்போது பாரதி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த பாரதியின் உறவினர்கள், சாவில் மர்மம் இருப்பதாக கூறி  சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.  இதனைத் தொடர்ந்து பாரதியின்  உடல், சேலம் அரசு மருத்துவமனையில்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  இதில் அவரது மூக்கின் மீது ரத்த காயமும், நெஞ்சு பகுதியில் வீக்கமும் இருந்தது தெரியவந்தது.  இதனால் அவர் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உதயசரணை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, இருவரும் தனியாக இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு, அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் பாரதியை தாக்கியதாக கூறியுள்ளார். மேலும் அவருடைய கழுத்தை நெரித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே பாரதி சாவு குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உதயச்சரணுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும்  இரண்டு மகன்கள் என குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இந்த நிலையில் தான்,  உதயச்சரணுக்கும் பாரதிக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. பாரதி மது ,  சிகரெட் போன்ற பழக்கம் உள்ளவர். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு உதயசரணிடம்  டார்ச்சர் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.  இதனால் உதயசரண்  பாரதியை அடித்து கொன்று  இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.