19 வயது காதலியை கொடூரமாக கொன்ற 25 வயது காதலன்!
கோவில்பட்டி அருகே காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் உமா (வயது 19). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஒரு தனியார் காவலர் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். அதே பயிற்சி மையத்தில் திருவேங்கடம் அருகே உள்ள கொளக்கட்ட குறிச்சியை சேர்ந்த மாரிசாமி என்பவர் மகன் ராஜேஷ் (25) என்பவர் பயிற்சி பெற்று வந்துள்ளார். இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கந்தூரி ரங்காபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் உமாவை ராஜேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கழுகுமலை போலீசார் உமா உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் தொடர்பாக கழுகுமலை போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


