பள்ளி தோழியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து அவரது கணவனுக்கு அனுப்பிய இளைஞர்!
தேனி மாவட்டத்தில் பள்ளித் தோழியுடன் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருந்த இளைஞர் ஆபாச வீடியோக்களை அவரது கணவருக்கு அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் உள்ள கூத்தாம்பட்டி ஸ்ரீராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான மருதுபாண்டி. பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த சில மாதங்களாக தேனியில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மருதுபாண்டி பள்ளி காலத்து தோழியான தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவைச் சேர்ந்த 28 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள அப்பெண், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்ததால் கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில் தான், பள்ளி காலத்து நண்பர்களான இளம் பெண்ணும், மருதுபாண்டிக்கும் இடையேயான பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. அப்போது இருவரும் தனிமையில் இருந்த ஆபாச வீடியோக்களை பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு இளைஞர் மருதுபாண்டி அனுப்பி உள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்திய சைபர் க்ரைம் போலீசார், மருதுபாண்டியின் செல்போன் எண்ணை ஆய்வுக்கு உட்படுத்தி வேடசந்தூரில் இருந்த அவரை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


