சாலையில் நடந்து சென்ற பெண்ணை இழுத்து சென்று பலாத்காரம் செய்ய முயற்சி! கையை கடித்துவிட்டு தப்பிய இளம்பெண்
சென்னை துரைபாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற கேரள பெண்ணை இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கேரளாவைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் சென்னையில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு இளம்பெண் பணியை முடித்து துரைப்பாக்கத்தில் வசிக்கும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்துள்ளார். இளம்பெண் வீட்டின் அருகே சென்றபோது அந்த நபர் இளம் பெண்ணின் வாயை பொத்தி இழுத்துச் சென்றபோது இளம் பெண் கையை கடித்து விட்டு கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பி ஓடி உள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து உடனடியாக துணை ஆணையரின் தனிப்படை போலீசார் அந்த நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த யோகேஸ்வரன்(24), என்பதும், பரோட்டா மாஸ்டராக பணியாற்றுவதும், குடிபோதையில் இது போன்ற செயலில் தான் செய்து விட்டதாகவும், என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை, தெரியாமல் செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் அவர் மீது பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து கைக்கு மாவுக்கட்டு போட்டு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


