"என் மனைவி பணத்துக்காக வேறு திருமணம் செய்ய போகிறார்"- 'தாடி' பாலாஜி புகார்- தொடரும் விஜய் டிவியின் விவாகரத்துக்கள் .

 
diverce


மகளை தவறாக வழி நடத்தி வேறு திருமணம் செய்யவுள்ளதாக தன் மனைவி மீது நடிகர் தாடி பாலாஜி புகாரளித்துள்ளார் 


தமிழ் சினிமா மற்றும் 'டிவி' சீரியல்களில் நடித்து வருபவர் 44 வயதான  தாடி பாலாஜி.இவர் தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து  வருகிறார்

 மகளை கேடயமாக்கி பணம் பறிப்பு மனைவி மீது 'தாடி' பாலாஜி புகார்

.இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் ஒரு மகளும் இருக்கிறார் .அந்த மகள் அவரின் தாயாருடன் வசித்து வருகிறார் .இந்நிலையில் அந்த பாலாஜி தன் மகளை தன்னுடன் அனுப்புமாறு அவரின் மனைவியிடம் கேட்டதற்கு அவர் அனுப்ப மறுத்துள்ளார் .அதனால் அவர் தன் மனைவி மீது புகாரளித்துள்ளார் .
தன் மகளை கேடயமாக பயன்படுத்தி, 20 லட்சம் ரூபாய் கேட்டு, தன் மனைவி தன்னை நித்யா தன்னை மிரட்டுவதாகவும் ,அவர் வெளிநாடு சென்று வேறு திருமணம் செய்ய இருப்பதால், அதற்கு தடையாக உள்ள அவரின்  மகளை ஆசிரமத்தில் சேர்க்கவும் முடிவு செய்துள்ளதாகவும்,தன் மனைவி வெளிநாட்டு  மோகத்தால், அவரின்  மகளை மன நோயாளியாக ஆக்கி விடுவாரோ என அஞ்சுவதாகவும் புகாரளித்துள்ளார் .மேலும்  இதை, தன்னால் தடுக்க முடியாததால் , ஆணையம் தலையிட்டு, தன் மகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் தன்  மனைவிக்கு விவாகரத்து கொடுப்பதில்,தனக்கு  எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ,தன்  மகளின் எதிர்காலம்தான் முக்கியம் என்று அவரளித்த புகாரில்   கூறப்பட்டுள்ளது.