பெண்ணை சந்தித்துவிட்டு திரும்பியபோது..., வெட்டி சரிக்கப்பட்ட அதிமுக புள்ளி

 
ச் ச்

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மர்மநபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மாரச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ்(32), அதிமுக உறுப்பினரான ஹரிஷ், வானவில் நகரில் குடியிருக்கும் பெண் ஒருவரை அடிக்கடி சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தநிலையில் நேற்றிரவு, அந்த பெண் வீட்டிற்கு சென்ற ஹரிஷ் உணவு சாப்பிட்டுவிட்டு மாரசந்திரம் கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.

அப்போது ஓசூர் அருகே மாருதிநகர் பகுதியில் உள்ள சாலையில் ஹரீஷ் உயிரிழந்து கிடப்பதாக அட்கோ போலிசாருக்கு தகவல் வந்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஹரீசை மர்மநபர்கள் வழிமறித்து கைகள் துண்டாக்கி சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த ஹரீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முதலில் ஒசூர் அரசு மருத்துவமனைக்கும் பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, முன்விரோதத்தால் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமாக உள்ளதா என போலிசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே ஹரீசை கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஹரீஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஸ்கர் அலி என்பவரை கத்தியால் குத்தியதாகவும் கூறப்படும் நிலையில் பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்