என்னை கொன்னுட்டு யாரை வேணும்னாலும் கல்யாணம் செஞ்சுக்க.. கள்ளக்காதலியின் ஆசையை நிறைவேற்றிய இளைஞர்

 
bப்

தனியார் விடுதியில் கள்ளக்காதலியின் சடலம்  மீட்கப்பட்ட நிலையில் பொறியியல் பட்டாதாரி  மாணவர் சிக்கி உள்ளார். 

 சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் கொல்லம் பட்டறை பகுதியில் உள்ள அந்த தனியார் விடுதியில் நேற்று முன்தினம் காலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  அவருடன் தங்கிய கள்ளக்காதலன் தப்பி ஓடிவிட்டதாக விடுதியில் உள்ளவர்கல் தெரிவித்திருக்கிறார்கள்.  தப்பியோடிய அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ர்ர்

போலீசாரின் தொடர் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் கடலூர் மாவட்டம் அடரிகளத்தூர் காஞ்சரங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பையாவின் மனைவி சிலம்பரசி என்பதும்,  கருப்பையா சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் தனது 2 மகன் ஒரு மகளுடன் சிலம்பரசி வசித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

 ராஜா அடரிகளத்தூர் என்கிற பெயரில் விடுதியில் அறை எடுக்கப்பட்டிருக்கிறது.   இதையடுத்து அது குறித்து  போலீசார் விசாரித்து வந்துள்ளார்கள்.  உண்மையிலேயே ராஜா என்பவர் தான் அறையில் தங்கியிருந்தாரா? அல்லது போலியாக வேறு ஏதும் பெயரை கொடுத்து இருக்கிறார்களா என்று தனிப்படை விசாரித்து வந்தார்கள்.  இந்த நிலையில் அது போலியான பெயர் என்பது தெரியவந்தது.   

மேலும் 6 பவுன் நகையை அடகு வைத்து விட்டு வருவதாகத்தான் சிலம்பரசி வீட்டை விட்டுச் சென்றார் என்று உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  இதனால் நகைக்காக கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்துள்ளனர்.

ர்ர்

இந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.    இந்த நிலையில் சிலம்பரசி பக்கத்துவீட்டு துரை என்பவரின் மகன் இளங்கோ பொறியியல் பட்டதாரி என்பதும் அவருடன் சிலம்பரசி அடிக்கடி வெளியூர் சென்று வந்ததும் தெரியவந்திருக்கிறது.   இதையடுத்து தலைமறைவாக இருந்த இளங்கோவை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் சிலம்பரசிக்கும் தனக்கும் கள்ள உறவு இருந்ததாகவும் பல ஆண்டுகள் பழகி வந்ததாகவும் அதனால் அடிக்கடி வெளியூர் சென்று லாட்ஜ் எடுத்து தங்கி உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

 சம்பவத்தன்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு தொந்தரவு செய்து இருக்கிறார் சிலம்பரசி.   முடியாது என்று சொல்லவும்,  அப்படி என்றால் என்னை கொலை செய்துவிட்டு வேறு யாரையாவது திருமணம் செய்து கொள் என்று சொல்லி இருக்கிறார் சிலம்பரசி.   இதில் ஆத்திரமாகி,   சேலையால் கழுத்தில் போட்டு இறுக்கியதில் சிலம்பரசி உயிரிழந்திருக்கிறார்.

உடனே  அறையை பூட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக போலீசாரிடம் சொல்லியிருக்கிறார்.   இதையடுத்து இளங்கோவை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.