தாயின் ஆண் நண்பர் வெறிச்செயல் - மகன் குத்திக்கொலை

 
k

தாயின் கள்ள உறவால் ஏற்பட்ட தகராறில் மகன் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.  சென்னையில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.  

 சென்னையில் விருகம்பாக்கத்தில் தாங்கல் ஏரிக்கையைச் சேர்ந்தவர் இளஞ்செழியன்.  38 வயதான இந்த வாலிபர் பிளம்பர் வேலை பார்த்து வந்திருக்கிறார்.   இவருக்கு தனலட்சுமி என்கிற மனைவியும் மதன்குமார்,  ஜீவா என இரண்டு மகன்களும் இருந்தனர்.   மதன்குமார் வேளச்சேரியில் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்திருக்கிறார்.

 கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக வேளச்சேரியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற வாலிபருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது பின்னர் இருவருக்கும் இடையே கள்ள உறவு உண்டாகியிருக்கிறது. இதனால் தனலட்சுமி குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று கார்த்திகேயன் வேளச்சேரியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

m

ஐந்து வருடங்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கார்த்திக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கின்றது.  இதனால் தனலட்சுமி அவரை பிரிந்து மீண்டும் கணவர் இளஞ்செழியனுடன் சேர்ந்து விருகம்பாக்கத்தில் வசித்து வந்திருக்கிறார்.  இதற்கிடையில் தன்னை ஏமாற்றி விட்டு கணவருடன் சென்ற தனலட்சுமி மீது ஆத்திரமடைந்த கார்த்திக்,  கடந்த ஏழாம் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள இளஞ்செழியன் வீட்டிற்கு வந்து தனலட்சுமியை தன்னுடன் வந்து விடுமாறு அழைத்திருக்கிறார்.

 அப்போது தனலட்சுமிக்கும் அவரின் மகன் மதன்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது . இது பின்னர் கைகலப்பாக மாறியிருக்கிறது.  அப்போது கார்த்திக்,  தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மதன்குமாரின் வயிற்றில் சரமாரி குத்தி விட்டு தப்பி இருக்கிறார்.  படுகாயம் அடைந்த மதன்குமாரை உறவினர்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர் .  

சம்பவம் குறித்து அறிந்த விருகம்பாக்கம் போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தெரிந்ததும் அவர் தலைமறைவாகி இருக்கிறார். இதற்கிடையில் மதன்குமாரின் வீட்டு அருகே சென்ற இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த போது கார்த்திக்கு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.  இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதன்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.  இதன் பின்னர் கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆதரித்து சிறையில் அடைத்துள்ளனர்.