மனைவியுடன் தகாத உறவு... தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன்!! உடந்தையாக இருந்த தாய், தந்தை

 
murder murder

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே தனது மனைவியோடு தகாத உறவில் ஈடுபட்ட தம்பியை அண்ணனே, மனைவி மற்றும் தாய், தந்தையோடு சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன்- வசந்தா தம்பதியரின் மகன்கள் முருகேசன் மற்றும் பாஸ்கரன். முருகேசன், மாலத்தீவில் கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வரும் நிலையில், ஊரில் உள்ள முருகேசனின் மனைவி விமலா ராணிக்கும், மனைவியை பிரிந்து வாழும் அவரது தம்பி பாஸ்கரனுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது முருகேசனின் பெற்றோர்களுக்கு தெரியவரவே அவர்களை கண்டித்து உள்ளனர். ஆனால் பாஸ்கரனும் விமலராணியும் தகாத உறவை தொடர்ந்ததால், இது குறித்து முருகேசனக்கு அவரது பெற்றோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதைக் கேட்டு ஆத்திரமடைந்த முருகேசன் தனது தம்பி பாஸ்கரனை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக கடந்த 26ம் தேதி இரவு ஊருக்கு வந்த முருகேசன், தனது மனைவியிடம் இது குறித்து கேட்டபோது தன்னை மிரட்டி கட்டாயப்படுத்தி பாஸ்கரன் தகாத உறவில் ஈடுபட்டதாகவும், இப்படி நடக்கவில்லை என்றால் தன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும்  விமலா ராணி தெரிவித்துள்ளார். இதனையடுத்துக் கடந்த 27ம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தம்பி பாஸ்கரனின் தலையிலும் நெஞ்சிலும் கல்லை தூக்கிப்போட்டு பின் கயிற்றால் கழுத்தை இறுக்கி முருகேசன் கொலை செய்துள்ளார். இதற்கு அவர்களின் பெற்றோர்களும் முருகேசனின் மனைவி விமலாராணியும் உடந்தையாக இருந்துள்ளனர். அதன் பின்னர் பாஸ்கரனின் இருசக்கர வாகனத்திலே அவரது சடலத்தை முருகேசன் மற்றும் அவரது தந்தையும் எடுத்துச் சென்று 300 மீட்டர் தொலைவில் சாலையோரம் வீசிவிட்டு விபத்தில் இறந்தது போல் சித்தரித்துள்ளனர்.

murder


அதனை முதலில் போலீசாரும் நம்பி சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் நேற்று வந்த பிரேத பரிசோதனை முடிவில் பாஸ்கரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததை தொடர்ந்து அதிர்ச்சடைந்த போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினார். அதன் அடிப்படையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவினால் ஆத்திரமடைந்த அண்ணன் முருகேசன் தம்பி பாஸ்கரனை திட்டமிட்டு தனது பெற்றோர் மற்றும் மனைவியின் ஒத்துழைப்போடு சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகம் ஆடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தம்பியை கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அண்ணன் முருகேசன், அவரது மனைவி விமலா ராணி, தாய் தந்தையர் வீரப்பன் மற்றும் வசந்தா ஆகிய நான்கு பேரையும் போலீசார் கொலை வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.