2 குழந்தைகள், குடும்ப கட்டுப்பாடு செய்ததை மறைத்து இளைஞரை கரம் பிடித்த ‘அக்கா’ காதலி

 
s s

திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து வாலிபரை கரம்பிடித்த கல்யாண ராணி சிக்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன்- அபுதா தம்பதியரின் மகன் விக்ரமன் (23) என்பவர்  செங்கல்பட்டு வேதாசலம் நகரில் செயல்பட்டு வரும் தங்கமயில் ஜீவல்லரியில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. விக்ரமனை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனால் தனது மகன் விக்ரமனை காணவில்லை என செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் விக்ரமனின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இந்நிலையில் விக்ரமன் ஏற்கனவே திருமணமான தன்னைவிட மூத்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தம்பதி சகிதமாக செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தார். போலீசார் இதுகுறித்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விக்ரமன் வேலை செய்து வரும் நகைக்கடையில் கடந்த ஒரு மாதம் முன்பு விஜயலட்சுமி என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த பெண் தன்னைவிட வயது குறைவான விக்ரமனுக்கு வலைவீசி, வேலைக்கு சேர்ந்த ஒரே மாதத்தில் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து வாலிபரை மயக்கி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி தனக்கு இரண்டு குழந்தைகள் போதுமென கருதி விஜயலட்சுமி குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதையும் மறைத்துள்ளார்.

விஜயலட்சுமி குறித்து கிடைத்த அதிர்ச்சி தகவலை தெரிந்து கொண்ட விக்ரமனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்ததோடு என் மகனுக்கு ஒரு வாரிசுக்கு கூட வழியில்லாமல் அடுத்தவன் குழந்தைகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டானே என காவல்நிலையத்தில் அழுது புலம்பிய சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்ததை காணமுடிந்தது. இதில் எதைப்பற்றியும் கவலைப்படாத விஜயலட்சுமி சர்வசாதாரணமாக சிறிதும் கூச்சமின்றி காவல்நிலையத்தில் இருந்து விக்ரமனின் கையை பிடித்து அழைத்துச் சென்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது