மனைவியின் கள்ளகாதலனை கொன்று ஆற்றில் வீசிய கொடூர கணவன்

 
s s

ஆந்திராவில் மனைவியுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்த காதலனை வீட்டிற்கு வரவழைத்த கணவர் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கோதாவரி ஆற்றில் வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

వైయ‌స్ఆర్‌సీపీ నేత‌ దారుణ హత్య .. | YSR Congress Party

ஆந்திர மாநிலம் தனுக்கு பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர்  சத்தியநாராயணா, மனைவி ஸ்ரீசாவுடன் வசித்து வந்தார். சத்தியநாராயணா எப்போதும் வழக்குகள் அதிக அளவில் இருப்பதன் காரணமாக  நீதிமன்றம், அலுவலகம் என சென்று வந்துள்ளார்.  இதனால் மனைவி ஸ்ரீசா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த தன்னுடன் கல்லூரி படித்த சுரேஷ் என்பவருடன் ஸ்ரீசாவிற்கு  மீண்டும் நட்பு ஏற்பட்டது. இருவரும் போன் நம்பரை பரிமாற்றம் செய்து கொண்டு பேச தொடங்கினார்.  இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவாக  மாறியது. எனவே சத்தியநாராயணன் இல்லாத நேரத்தில் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இருவரும் அடிக்கடி வீட்டில்  தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். 

இந்த விவகாரம் நாளடைவில் அக்கம் பக்கதத்தினர் மூலமாக கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஸ்ரீசா தொடர்ந்து சுரேஷுடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் சத்தியநாராயணா,  “எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டியா” என்று கூறி மனைவி சரமாரியாக அடித்துள்ளார். மேலும் நான் சொல்வதை செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டி ஸ்ரீசா மூலமாகவே சுரேஷை அவரது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். சுரேஷ் வருவதற்குள் அங்கு மறைந்து காத்திருந்த சத்தியநாராயணா, அவரது நண்பர்கள் நான்கு பேரை நடந்ததை கூறி வீட்டிற்கு வரவழைத்து காத்திருந்து சுரேஷ் வந்ததும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி அருகில் உள்ள கோதாவரி ஆற்றில் வீசி விட்டு எதுவும் தெரியாதது போல வழக்கம் போல் தனது வேலைகளை செய்து வந்துள்ளார்.

வெளியே செல்வதாக கூறி சென்ற சுரேஷ் மீண்டும் வீட்டிற்கு வராததால்  பதற்றம் அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷை தேடி வந்த நிலையில், கோதாவரி ஆற்றில் ஒரு சாக்கு மூட்டை மிதப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் சுரேஷின் உடல் அழுகிய நிலையில் உடலில் பல இடங்களில் காயத்துடன் கொலை செய்யப்பட்டதை பார்த்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சுரேஷ் யாருடன் கடைசியாக பேசியுள்ளார் என ஆய்வு மேற்கொண்டனர்.அதில் ஸ்ரீசா வீட்டில் சுரேஷ் கடைசியாக  இருந்ததை செல்போன் டவர் மூலம் கண்டுபிடித்த போலீசார் ஸ்ரீசாவிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரது கணவர் கொலை செய்தது தெரியவந்தது.  இதையடுத்து ஸ்ரீசா, சத்தியநாராயணா மற்றும் அவருக்கு உதவிய அவரது நணபர்கள் 4 பேர் உள்பட 6 பேரை  கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.