"கண்ட இடத்துல கேமரா வச்சி ,பெண்களை கண்டபடி ஆடவச்சி .."நடன வகுப்பில் ஒரு டான்ஸ் மாஸ்டரின் லீலைகள்

 
rape

நடனம் கற்றுக்கொள்ள வந்த பெண்களை ஆபாசமாக படமெடுத்து பணம் கேட்டு மிரட்டிய டான்ஸ் மாஸ்ட்டரை பொலிஸ் கைது  செய்தது 

Representative image
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் வசிக்கும் ஹிமான்ஷு கோலி என்பவர் ஒரு நடன வகுப்பு நடத்தி வந்தார் .அவரின் நடன வகுப்பில் 14 வயது முதல் 18 வயது வரை உள்ள பல டீனேஜ் பெண்கள் நடனம் கற்றுக்கொள்ள வந்தனர் .அந்த நடன ஆசிரியர் ஹிமான்ஷு கோலி அந்த பெண்களை வைத்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டம் போட்டார் .அதன்படி அவர் தனது நடன வகுப்பில் பல இடங்களில் கேமராவை ஒளித்து வைத்து அந்த பெண்களை கண்டபடி  ஆபாசமாக டான்ஸ் ஆட வைத்து அதை படம் பிடித்தார் .
பிறகு அவர் அந்த பெண்களில் பெற்றோரிடம் அதை காண்பித்து  பணம் கேட்டு மிரட்டினார் .அப்படி அவர் ஜஸ்வந்த் என்ற ஒரு பெண்ணின் தந்தையிடம் அவரின் மகளின் ஆபாச நடன போட்டோவை காண்பித்து அதை ஊடகத்தில் வெளியிடாமலிருக்க பணம் கேட்டார் .அதனால் பயந்த  அந்த ஜஸ்வந்த் 20000 ரூபாய் பணத்தை அந்த ஹிமான்ஷு கோலி அக்கௌண்டுக்கு அனுப்பினார் .
பின்னர் அவரின் தாய்  போலீசில் புகார் அளித்ததும் .போலீசார் அந்த் ஹிமான்ஷு கோலியை கைது செய்து அவரின் செல்போனை பார்த்த போது அவர் இது போல  14 க்கும் மேற்பட்ட நடன பெண்களை படமெடுத்து வைத்துள்ளதை  கண்டுபிடித்து அவரை  கைது செய்து விசாரித்து வருகின்றனர்  .