மாற்றுத்திறனாளி இளைஞர் கழுத்தறுத்து கொலை! தாம்பரம் அருகே பரபரப்பு
தாம்பரம் அடுத்த மப்பேடு-ஆலப்பாக்கம் பிராதன சாலை அருகே முட்புதரில் கொலை செய்யப்பட்ட இளைஞர் உடலை சுடிதார் உடையை சுற்றி போர்த்திய நிலையில் சேலையூர் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த மப்பேடு-ஆலப்பாக்கம் பிராதன சாலை புத்தூர் அருகே சாலை ஓரம் முட்புதரில் கழுத்தறுக்கபட்டு வாலிபர் சடலம் ஒன்று இருப்பதை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை பார்த்த போது 20 வயது மதிக்கதக்க நபரின் கழுத்து அறுக்கபட்டு முகத்தில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சிகப்பு சுடிதார் துணியில் உடல் சுற்றி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த இளைஞரின் கையில் சூர்யா என்று பச்சை குற்றியிருப்பதை கண்டறிந்த போலீசார் விசாரனையை தொடங்கி உள்ளனர்.
பின்பு வந்த பள்ளிக்கரனை துணை ஆணையர் கார்த்திகேயன் நேரில் சம்பவ நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். இதனையடுத்து உடலை மீட்ட சேலையூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ரத்த கரையுடன் இருந்த சுடிதார் துணியையும் கைப்பற்றி நடத்திய விசாரணையில் மப்பேடு பகுதியை சேர்ந்த சூர்யா என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவ இடத்திற்க்கு மோப்ப நாய் டைசன் வரவழைக்கபட்டு விசாரனையை தொடங்கி உள்ளனர். கழுத்தறுக்கப்பட்டு நிலையில் இளைஞரின் உடல் சாலையின் அருகிலேயே இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


