டார்ச்சர் கொடுத்த முன்னாள் காதலன்- புது காதலனை ஏவி இளம்பெண் ரிவெஞ்ச்! அடித்து கொன்று எரித்து வீசிய கொடூரம்

 
ச்

கிருஷ்ணகிரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவரின் கொலை வழக்கில் கொலை செய்த காதலன், அவரது காதலியுடன் கைது செய்யப்பட்டார்.

murder

கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அடுத்த பெரியதக்கேப்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திக் (30), டிரைவரான இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். போத்திநாயனப்பள்ளியில் உள்ள இவரது விவசாய நிலத்தில் ஆடுகளையும் வளர்த்து வந்துள்ளார். கடந்த 2ம் தேதி இரவு அங்கு சென்ற அவர், அங்குள்ள கொட்டகையில் தூங்கியுள்ளார். மறுநாள் காலை உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த மகாராஜகடை போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். போலீசார் விசாரணையில், கார்த்திக்கை தாக்கி கொன்று, தீ வைத்து எரித்தது தெரிந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதி மொபைல் டவர் லோகேஷன் உள்ளிட்டவற்றை வைத்து அந்நேரத்தில் அங்கு இருந்தவர்களின் மொபைல் எண்களை போலீசார் எடுத்தனர். அதில் கடந்த, 2ம் தேதி இரவு, கிருஷ்ணகிரி அடுத்த பழையூரை சேர்ந்த புவனேஸ்வரி(22) என்பவர் மொபைலிலிருந்து, தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையத்தை சேர்ந்த தனியார் மருந்தக பணியாளர் தினேஷ்குமார் (25) என்பவருக்கு அடிக்கடி போன் வந்ததும், அவரது மொபைல், கொலை நடந்த இடத்திற்கு அருகே வந்து சென்றதும் போலீசாருக்கு தெரிந்தது.

தினேஷ்குமார் தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பணி தொடர்பாக அவ்வப்போது கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு வந்து செல்வதும் தெரிந்தது. இன்று மாலை, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு மெடிக்கலுக்கு வந்த தினேஷ்குமாரை மகாராஜகடை போலீசார் பிடித்தனர். அப்போது அவர் கார்த்திக்கை கொலை செய்தததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், தானும், புவனேஸ்வரியும் கடந்த ஓராண்டாக காதலித்து வருகின்றோம். அதற்கு முன் புவனேஸ்வரிக்கு கார்த்திக்குடன் பழக்கம் இருந்துள்ளது. என்னுடன் காதல் ஏற்பட்ட பிறகு கார்த்திக்குடன் பழகுவதை புவனேஸ்வரி நிறுத்தியுள்ளார். இருப்பினும் கார்த்திக், புவனேஸ்வரிக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார். 

இது குறித்து புவனேஸ்வரி, தன்னிடம் கார்த்திக்கை பற்றி தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்து, புவனேஸ்வரியிடம் கார்த்திக்கிடம் பேசி தனியாக இருக்கும் இடத்திற்கு வரவழைக்க சொல்லியதாகவும், அதன்படி கார்த்திக்கும் கடந்த, 2ம் தேதி இரவு தன் விவசாய நிலம் உள்ள போத்திநாயனப்பள்ளி விவசாய நிலத்திற்கு வந்தார். அப்போது அங்கு சென்ற நான், தூங்கிய கார்த்திக்கை இரும்பு ராடால் அடித்து கொன்றதாகவும், தடயங்களை மறைக்க கொட்டகையில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்ததாகவும் கூறியுள்ளார். பைக்கில் திரும்பிய தினேஷ் குமார், பழையூர் ஏரிக்கரையில் இரும்பு ராடை வீசிவிட்டு, கிருஷ்ணகிரி டூ வீலர் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்திவிட்டு, பெங்களூருவுக்கு பேருந்தில் சென்றுள்ளார். ஆனால் மொபைல் டவர், ‘சிசிடிவி’ காட்சிகளை வைத்து கொலை செய்த தினேஷ்குமார்,  கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது காதலி புவனேஸ்வரி ஆகிய இருவரையும் மகாராஜகடை போலீசார் இன்று மாலை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.