கணவரைப் பிரிந்த பெண்களை குறி வைக்கும் போலி சிபிஐ அதிகாரி

 
si

கணவரை பிரிந்த பெண்களை குறிவைத்து அவர்களை மறுமணம் செய்துகொள்வதாக  ஏமாற்றி மோசடி செய்து வந்த போலி அதிகாரி சிவா போலீசில் சிக்கி இருக்கிறார்.

 சென்னை ராஜகீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ்.  தொழிலதிபரான மோகன்தாஸ் மகள் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இதை தெரிந்துகொண்ட சிவா,   மோகன்தாசிடம் சென்று  அவரது மகளை தான் திருமணம் செய்து கொள்வதாக கூறி இருக்கிறார்.   தான் சிபிஐ அதிகாரி என்றும் சொல்லியிருக்கிறார்.

si

 ஆனால் முதல் கணவரை விவாகரத்து செய்ய முடியாமல் எப்படி திருமணம் செய்வது என்று மோகன்தாஸ் கேட்க ,  விவகாரத்துக்கு நான் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் அதற்கு கொஞ்சம் பணம் நிறைய செலவாகும் என்று சொல்ல,   அதன்படி சிவா சொன்னபடி விவகாரத்து செலவிற்காக 85 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார் .மேற்கொண்டு ஒரு சொகுசு காரையும் சிவாவிடம் ஒப்படைத்திருக்கிறார்.

 இவற்றையெல்லாம் வாங்கி கொண்ட பின்னர் சிவா தலைமறைவாகி இருக்கிறார்.  பலமுறை தொடர்பு கொண்டும் மோகன்தாசினால் சிவாவை தொடர்பு கொள்ள முடியாததால்,  தான்  ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார்.  

 இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று சிபிஐ அதிகாரி என்று சொல்லி சிவா தன்னிடம் பழகியதாகவும் தன் மகளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால் முதல் கணவரை விவாகரத்து செய்வதற்காக 85 லட்சம் ரூபாய் பணமும் ஒரு சொகுசு காரும் கொடுத்தேன் என்று சொல்லியிருக்கிறார்.

 போலீசார் மேற்கொண்ட விசாரணையில் போலி சிபிஐ அதிகாரி என்கிற பெயரில் கணவரை பிரிந்த பெண்களை தொடர்ந்து குறிவைத்து அவர்களை மறுமணம் செய்வது வருவதாக சொல்லி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது.   இதனால் தலைமறைவாக இருக்கும் சிவாவை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில் சிவா போலீசில் சிக்கினார்.  அதன்பின்னர் அவளிடமிருந்த பணத்தையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.