தோழியின் பெயரில் ஃபேக் ஐடி.. ஆபாச சாட்டிங் செய்த ஐடி ஊழியர் கைது..

 
தோழியின் பெயரில் ஃபேக் ஐடி.. ஆபாச சாட்டிங் செய்த ஐடி ஊழியர் கைது..

தோழியின் பெயரில் ஃபேக் ஐடியை உருவாக்கி, ஆண்களுடன் ஆபாச சேட்டிங் செய்து வந்த ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சாலையை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் போலி ஐடியை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வருவதாக  சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். சென்னை போரூரில் தங்கி ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி  வரும் அந்த இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துகொண்ட சைபர் கிரைம் போலீஸார், ஃபேக் ஐடி உருவாக்க பயன்படுத்திய இமெயில் மற்றும் செல்போன் எண்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தோழியின் பெயரில் ஃபேக் ஐடி.. ஆபாச சாட்டிங் செய்த ஐடி ஊழியர் கைது..

இதில் திருவொற்றியூர் எஸ்.பி கோவிலை சேர்ந்த ஐடி ஊழியரான தமிழ்மாறன்(23) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதாகியுள்ள  தமிழ்மாறன்,  புகாரளித்த இளம்பெண்ணின் நண்பர் என்பதும், இருவரும் ஒரே  ஐடி கம்பெனியில் பணியாற்றி வருவதும்  விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், தனது ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்களை தெரியாமல் புகைப்படம் எடுத்து, அதனை டிபியாக வைத்து  Fake ஐடி உருவாக்கியதும், அதிலிருந்து பல ஆண்களுடன் நள்ளிரவில் ஆபாச சாட்டிங் செய்து வந்ததும் தெரியவந்தது.  புகாரளித்த  பெண்ணுக்கு தெரியாமல்  தமிழ்மாறன் தினமும் புகைப்படம் எடுத்து, முகநூலில் ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டு வந்ததும், இணையதளங்களில் ஆபாச புகைப்படங்களில் பதிவிறக்கம் செய்து அதை பல ஆண்களுக்கு  அனுப்பி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

arrest

அப்படி ஒரு இளைஞருடன் பேசி வந்தபோது, குரல் ஆணின் குரல்போல் இருப்பதாக அவர் கூறியதும் , முகநூரில் அவரை தமிழ்மாறன் ப்ளாக் செய்திருக்கிறார். இதனால் அந்த இளைஞர்  இன்ஸ்டாகிராமில் அதே பெண்ணின் ஐடியை போட்டு தேடிய போது,  உண்மையான அந்த பெண்ணின் ஐடியை கிடைத்திருக்கிறது. உடனே அந்த இளைஞர் ஏன் தன்னிடம் பேசுவதை நிறுத்துவிட்டாய் என கேட்டதால், அந்த பெண் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அப்போது தான் அந்தப் பெண்ணுக்கு ஃபேக் ஐடி குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்பின்னரே அவர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.  "லவ் டுடே" படத்தில் வருவது போல நண்பர்களை கலாய்ப்பதற்காக  பேக் ஐடி உருவாக்கியதாகவும்,  ஆபாசமாக சேட் செய்யவில்லை என்றால் இரவில் தூக்கம் வருவதில்லை எனவும், அதுமட்டுமின்றி சில இளைஞர்களிடம் அவ்வபோது ஆயிரக்கணக்கில் பணம் பெற்று வந்ததாகவும் தமிழ்மாறன் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.  இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் தமிழ்மாறனை, கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.