12 ஆம் வகுப்பு மாணவன் அடித்து கொலை- தந்தை, மகன் கைது

 
murder murder

மழையம்பட்டு தக்கா கிராமத்தில் மாடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் 12 ஆம் வகுப்பு  மாணவன்  அடித்து கொலை வழக்கில் தந்தை, மகன் கைதுசெய்யப்பட்டனர்.

murder

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழையம்பட்டு தக்கா கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரிம் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் விக்னேஷ் நேற்று தனது வீட்டு அருகே உள்ள நிலத்தில் மாடு கட்டி மேய்த்து உள்ளார்.  அப்போது சுப்பிரமணி மனைவி பூபதிக்கும்  விக்னேசுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு  ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சுப்பிரமணி, அவரது மகன் அஜய் பூபதி ஆகியோர்  தடியால் அடித்து தாக்கியதில் விக்னேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதனையடுத்து விக்னேசை அவரது உறவினர்கள்  திருவெண்ணெய்நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து அதன்பிறகு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது விக்னேசை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொலை சம்பவம் தொடர்பாக விக்னேசின் தந்தை வீரப்பன் திருவெண்னைய் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று சுப்பிரமணி மற்றும் அவரது மகன் அஜய், இருவரும் கைது செய்து, மேலும் சுப்பிரமணி மனைவி பூபதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை இதுவரைக்கும் கைது செய்யவில்லை. அவரது உறவினர் மேலமங்கலம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் தலைமறைவு உள்ளார்.