"புது கொரானா ஓமிக்ரானுக்கு தடுப்பூசி போட வந்திருக்கோமுங்க" -ஏமாற்றி வீட்டுக்குள் வந்தவர்கள் செஞ்ச காரியம்.

 
gun shot

நாட்டில் எது நடந்தாலும் அதை வைத்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .சமீபத்தில் புதுசாக உலக நாடுகளை பீதியில் தள்ளியிருக்கும் ஓமிக்றான் கொரானா வைரசுக்கு தடுப்பூசி போடுவதாக கூறி ஒரு வீட்டினுள் நுழைந்த கூட்டம் அங்கிருந்தவர்களை மிரட்டி  நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது 

Covid
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள யஷ்வந்த் பூரில் ஒரு முக்கிய பகுதியில் ஒரு வசதியான தம்பதிகள் தனியாக வீட்டில் இருந்தனர் .அந்த தம்பதிகளை ஏமாற்றி பணம் பறிக்க அந்த பகுதியில் வாழும் சிலர் திட்டமிட்டனர் .அதன் படி அவர்களிடம் அந்த கூட்டம் கடந்த வாரம் ஒரு நாள் முக மூடி அணிந்து கொண்டு வந்தனர் .பிறகு அவர்களின் வீட்டினுள் செல்ல அந்த கூட்டம் ஒரு திட்டம் தீட்டியது .
அவர்களின் தந்திரப்படி , உருமாறிய 'ஒமைக்ரான்' கொரோனா பரவுவதால், புதிய தடுப்பூசி செலுத்த வந்துள்ளதாக கூறினர் .அவர்கள் மருத்துவர் உடை அணிந்திருந்ததால் அந்த  தம்பதிகள் அவர்களை நம்பி கதவை திறந்தனர் .பிறகு அந்த வீட்டினுள் வந்த அந்த வந்த மூவர், துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த 50 கிராம் தங்க நகைகளை  கொள்ளை அடித்துவிட்டு  தப்பியோடிவிட்டனர் .பிறகு  இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிய வந்து ,அந்த அப்பகுதிக்கு விரைந்து வந்தனர் .பின்னர் இது பற்றி வழக்கு பதிந்து அந்த நபர்களை தேடி வருகின்றனர்