"பள்ளி சீருடையிலேயே மாணவிக்கு வந்த பிரசவ வலி " -கர்ப்பத்துக்கு காரணமானவரை கண்டு அதிர்ச்சி .
பத்தாம் வகுப்பு மாணவியை தாயாக்கி தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா சிக்கலநேர்ப்பு ஹோப்ளிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வரும் 15 வயது மைனர் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த மைனர் பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் . அவரின் வீட்டருகே நவீன் என்ற 24 வயதான வாலிபர் வசித்து வந்தார் .அவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து அந்த பெண்ணை பார்த்துள்ளார் .
இந்நிலையில் அந்த மாணவி ஸ்கூல் சென்று விட்டு வந்ததும் ,மீதி நேரத்தில் அங்குள்ள வயல் வெளிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம் .இதை நோட்டமிட்ட அந்த நவீன் அந்த மாணவியை மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் அந்த மாணவி கர்ப்பமானார் .ஆனால் அது தெரியாமல் அவர் ஸ்கூலுக்கு சென்று வந்தார் .இந்நிலையில் அந்த மாணவி ஒரு நாள் வயிற்று வலியால் துடித்த போது அவரை ஹஸ்ப்பிட்டலில் சேர்த்தனர் .அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது .அதை கேட்டு அதிர்ச்சியான அவரின் பெற்றோர் அவரிடம் கேட்டபோது, இதற்கு அதே பகுதியில் வசிக்கும் நவீன்தான் காரணம் என்றார் .பின்னர் அந்த பெண் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார் .அதன் பிறகு அந்த பெண்ணின் பெற்றோர் நவீன் மீது கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார் .


